சிவனின் அருளைக் கொண்டாடும் 5 வகை சிவராத்திரி.., என்னென்ன தெரியுமா?
சிவன் இந்து சமயத்தில் கூறப்பட்டுள்ள மும்மூர்த்திகளுள் ஒருவர். சிவனுக்குரிய விரதமான மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது.
இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.
இந்நிலையில், இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
அந்தவகையில், சிவனுக்கான இரவு என்ற சிவராத்திரி ஐந்து வகையாக கூறப்பட்டுள்ளது.
1. நித்திய சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்ச, சுக்லபட்ச சதுர்த்தசிகளில் வருவது நித்திய சிவராத்திரிகள். இது போல் மாதம் இரண்டு முறை வரும் நித்திய சிவராத்திரி விரதத்தை தொடர்ந்து 24 முறையும் அனுசரிப்பதே நித்திய சிவராத்திரி விரதம்.
2. பட்ச சிவராத்திரி
தை மாதம் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் 13 நாட்கள் ஒரு நேரம் மட்டும் உணவு உண்டு 14-ம் நாளான சதுர்த்தசியில் முழு நேர உபவாசம் இருப்பது பட்ச சிவராத்திரி.
3. மாத சிவராத்திரி
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் வருவது. சித்திரை மாதம் கிருஷ்ணபட்ச அஷ்டமியில், வைகாசி மாதம் சுக்லபட்ச அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட அஷ்டமியில், ஆனி மாதம் சுக்லபட்ச சதுர்த்தியில், ஆடி மாதம் கிருஷ்ணபட்ச பஞ்சமியில், ஆவணி மாதம் சுக்லபட்ச அஷ்டமி யில் புரட்டாசி மாதம் சுக்லபட்ச திரயோதசிய ஐப்பசி மாதம் சுக்லபட்ச துவாதசியில், கார்த்திகை மாதம் சுக்லபட்ச சப்தமியில், மார்கழி மாதம் சுக்லபட்ச சதுர்த்தசியில், தை மாதம் சுக்லபட்ச திருதியையில், மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியில், பங்குனி மாதம் சுக்லபட்ச திருதியையில் வருவது மாத சிவராத்திரி என்றழைக்கப்படும்.
4. யோக சிவராத்திரி
சோமவார நாளன்று (திங்கட்கிழமை) பகல், இரவு முழுவதும் அமாவாசையாக பொருந்தி வந்தால் அது யோக சிவராத்திரி.
5. மகா சிவராத்திரி
சிவன் என்றால் மங்களம் என்று பொருள். ராத்திரி என்றால் இரவு. எனவே மங்களகரமான இரவு என்று மகாசிவராத்திரியை சொல்லலாம்.
எல்லா வகையான சிவராத்திரிகளிலும் மேலானதும் வருடம் ஒரு முறை மட்டுமே வருவதும் அனைத்து விதமான பாவங்களையும் நீக்கி நல்வாழ்வை தருவதும், எல்லா நலன்களையும் தரக்கூடியதுமான வார்த்தைகளால் விவரிக்க முடியாத பெருமை பெற்றது தான் மகா சிவராத்திரி.
5 வகை சிவராத்திரியையும் அனுஷ்டிக்கலாம், முடியாதவர்கள் அவசியம் வருடம் ஒருமுறை வரும் மகா சிவராத்திரி அன்றாவது விரதம் இருக்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |