தினமும் விளக்கேற்றும் பொழுது செய்யக்கூடாத 6 தவறுகள் என்ன தெரியுமா ?
தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பூஜை அறையில் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்வது என்பது காலம் காலமாக நம்முடைய இந்து மத சாஸ்திரத்தில் பின்பற்றி வரக்கூடிய ஒன்றாகும்.
விளக்கு என்பது நம் வீடுகளில் இருக்கக்கூடிய இருளை மட்டும் விலக்குவதோடு அல்லாமல் நம் வீடுகளில் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல் கெட்ட நேரம் போன்ற எல்லா விஷயங்களையும் போக்கி ஒரு நல்ல அதிர்வலைகளை வரச் செய்கிறது.
அந்த வகையில், விளக்கு ஏற்றும் பொழுது நாம் நெய் அல்லது எண்ணெய் தேர்வு செய்து விளக்கேற்றுவதுண்டு. அப்படியாக, விளக்கேற்றும் பொழுது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி பார்ப்போம்.

விளக்கேற்றுவதால் கிடைக்கும் நன்மைகள்:
தினமும் வீடுகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் நாம் விளக்கேற்றி அந்த தீபச்சுடரை நாம் பார்க்கின்ற பொழுதும் நம்முடைய உடலில் நல்ல அதிர்வலை உருவாகிறது. அது மட்டுமல்லாமல் நமக்கு ஒரு மன அமைதி மகிழ்ச்சி போன்ற நிலை கிடைக்கிறது.
நெய் விளக்கிற்கு ஏற்றினால் கிடைக்கும் நன்மைகள்:
பொதுவாக, வீடுகளில் நாம் நெய் விளக்கு ஏற்றுவதும் உண்டு. பசு நெய் என்பது ஆன்மீக ரீதியாக மிகவும் தூய்மையானதாகவும் சாத்வீகமானதாகவும் கருதப்படுகிறது. வீடுகளில் நெய் விளக்கு ஏற்றும் பொழுது நமக்கு ஒரு நேர்மறையான சூழல் உருவாகுவதோடு குடும்பத்தில் மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.
முதலில் என்ன செய்ய வேண்டும்:
நம்முடைய இந்து மத சாஸ்திரத்தின் அடிப்படையில் பஞ்சபூதங்கள் ஒன்றான நெருப்பு அக்னி பகவானாக நாம் போற்றி வழிபாடு செய்கின்றோம். அந்த வகையில், நாம் முக்கிய தெய்வ வழிபாட்டிற்கு முன்பாக அக்னி பகவானை மனதார நினைத்து ஒரு சிறிய விளக்கை ஏற்றுவது சிறப்பு என்று சொல்கிறார்கள். அவ்வாறு அந்த விளக்கை ஏற்றி வழிபாட்டை தொடங்கும் பொழுது வீடுகளில் லட்சுமிதேவியின் அருளும் செல்வ வளமும் கிடைக்கிறது.

செய்யக்கூடாத தவறுகள்:
ஒரு சிலர் விளக்கில் நெய் மற்றும் எண்ணெயை ஒன்றாக கலந்து விளக்கேற்றுவதை பார்க்க முடிகிறது. அவ்வாறு பயன்படுத்தக்கூடாது. நெய் சாத்வீகத்தையும், எண்ணெய் வேறுபட்ட ஆற்றலையும் குறிக்கக் கூடியது என்பதால் இதனை கலந்து நாம் எப்பொழுதும் விளக்கேற்றக்கூடாது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
ஒரு சில நேரங்களில் விளக்கேற்றிய பிறகு காற்றினாலோ அல்லது வேற ஒரு காரணத்தினாலோ, விளக்கு தற்செயலாக அணைந்துவிடும். அந்த நேரங்களில் குடும்பத்தில் உள்ளவர்கள் அதை ஒரு மிகப்பெரிய அபசகுனமாக பார்ப்பார்கள்.
அவ்வாறு கருதாமல் இறைவனை மனதார நினைத்து எந்த ஒரு தடங்கலும் இனி குடும்பத்திற்கு வரக்கூடாது, வந்த தடங்கலோடு அது போகட்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு மீண்டும் அமைதியாக விளக்கை ஏற்றலாம்.
அதை போல், ஆரத்தி அல்லது பூஜையின் பொழுது விளக்கு தற்செயலாக கீழே விழுந்து விட்டால் கவலை கொள்ள வேண்டாம். நம்முடைய குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் மனதார பிரார்த்தனை செய்து கொண்டு கோவில் வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |