சிவராத்திரி வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய 6 அம்சங்கள்
By Yashini
மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும்.
இந்த மகா சிவராத்திரி தினத்தில், சிவபெருமான் ஆனந்த நடனம் ஆடினார் என்று நம்பப்படுகிறது.
இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.
மகா சிவராத்திரி இரவு கோவிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம" என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.
அந்தவகையில், சிவராத்திரி வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய 6 அம்சங்கள் குறித்து பார்ப்போம் .
முக்கிய 6 அம்சங்கள்
- சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல் வேண்டும். இது ஆன்மாவைத் தூய்மைப் படுத்துதலைக் குறிக்கும்.
- லிங்கத்திற்கு குங்கும் அணிவித்தல் நல்லியல்பையும் நல்ல பலனையும் வழங்கும்.
- உணவு நிவேதித்தல் நீண்ட ஆயுளையும் விருப்பங்கள் நிறைவேறுவதையும் குறிக்கும்.
- தீபமிடுதல் செல்வத்தை வழங்கும்.
- எண்ணெய் விளக்கேற்றுதல் ஞானத்தை அடைதலைக் குறிக்கும்.
- வெற்றிலை அளித்தல் உலக இன்பங்களில் திருப்தியைக் குறிக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |