சைவக் கடவுளான சிவன் பார்வதி தம்பதிகளுக்கு மகனாக பிறந்தவர் முருகப்பெருமான்.இவர் கலியுக வரதனாக போற்றப்படுகிறார்.அதாவது சிவபெருமான் தனது ஆறு முகத்திலிருந்தும் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதை தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார்.
அந்த நெருப்புகள் ஆறு குழந்தைகளாக கார்த்திகை பெண்களிடம் வளர்ந்தனர்.அவ்வாறாக அன்னை பார்வதி ஆறு குழந்தைகளையும் ஒருசேர அணைத்து கொள்ள ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்பது புராணம். அப்படியாக நாம் கட்டாயம் முருகப்பெருமானை பற்றி தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான விஷயங்கள் இருக்கிறது அதை பற்றி பார்ப்போம்.
1.முருகப்பெருமான் ஆறு பகைவர்களை தடம் தெரியாமல் அழித்துள்ளார்.அது தான் ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம் ஆகும்.
2.அதே போல் முருகப்பெருமான் அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.அதில் சூரபத்மனை வதம் செய்த இடம் திருச்செந்தூர், தாரகாசுரனை வதம் செய்த இடம் திருப்பரங்குன்றம்,இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்த இடம் போரூர் ஆகும்.
3.சிலருக்கு ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் இருக்கும்.அவர்கள் தோஷம் போக்க கட்டாயம் வழிபடவேண்டியவர் முருகப்பெருமான்.அதாவது செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு முருகப்பெருமானின் ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும்.இதனால் அவர்களின் தோஷம் விலகி நன்மை பெறலாம்.
4.முருகப்பெருமானின் தீவர பக்தரான அருணகிரிநாதர் முருகனை பார்த்து,"முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்" என்று பாடியுள்ளார்.இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம் நாம் முருகப்பெருமானின் அற்புதத்தை.
5.ஒவ்வொரு கடவுள்களுக்கும் ஒவ்வொரு பூக்கள் விஷேசமாகும்.அப்படியாக முருகப்பெருமானுக்கு உகந்த மலராக முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.
6. முருகனின் மூலமந்திரம் “ஓம் சரவணபவாய நம “என்பதாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |