நவராத்திரி அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் முன்பு இந்த 7 பொருட்களை அகற்றி விடுங்கள்

By Sakthi Raj Oct 09, 2026 04:49 AM GMT
Report

மகாளய அமாவாசை முடிந்தவுடன் அடுத்த நாளிலிருந்து நவராத்திரி வழிபாடுகள் வெகு சிறப்பாக துவங்குகிறது. 2026 ஆம் ஆண்டு மகாளய அமாவாசை அக்டோபர் 10 ஆம் தேதியும் நவராத்திரி தொடக்கம் அக்டோபர் 11ஆம் தேதியும் வருகிறது.

அம்பிகைகளின் 9 சக்திகளாக இருக்கக்கூடிய அம்மனின் வடிவங்களை வழிபாடு செய்து அவர்களுடைய அருளை பெறுவதற்கான ஒரு அற்புதமான காலகட்டமாகும்.

மேலும், வீடுகளில் கலசம் வைத்து கொலு அமைத்து அம்பிகையை எழுந்தருள செய்வதற்கு முன் வீடுகளை சுத்தப்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில், சாஸ்திர ரீதியாக நவராத்திரிக்கு முன்பாக இந்த ஏழு பொருட்களை வீட்டிலிருந்து அகற்றி விடுவது நல்ல மாற்றத்தை கொடுக்கும் என்று சொல்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.

நவராத்திரி அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் முன்பு இந்த 7 பொருட்களை அகற்றி விடுங்கள் | 7 Things Should Remove Before Navarathri Festival

உங்கள் ராசி படி முன் ஜென்மத்தில் நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

உங்கள் ராசி படி முன் ஜென்மத்தில் நீங்கள் யார் என்று உங்களுக்கு தெரியுமா?

1. வீடுகளில் உடைந்த அல்லது விரிசல் ஏற்பட்ட சேதமடைந்த தெய்வ சிலைகள் இருந்தால் அல்லது படங்கள் இருந்தால் அதனை அகற்றி விடுவது நல்லது. இதனை அவமதிக்காமல் உரிய மரியாதை உடன் அகற்றுவது நல்லது. முடிந்தால் சமய மரபை அறிந்தவர்களுடைய ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.

2. வீடுகளில் நின்று போன கடிகாரங்களை சரி செய்து ஓட வைத்து விடுங்கள். இல்லை என்றால் அதை பற்றி விடுங்கள். வீட்டின் நுழைவாயில் எப்போதும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் இருக்க வேண்டும். அங்கு அழுக்கான செருப்பு, நீண்ட நாள் பயன்படுத்தாத பொருட்கள் இருந்தால் அகற்றி விட வேண்டும்.

3. அதேபோல், வீடுகளில் காய்ந்துபோன செடிகள் இருந்தால் அதனையும் உடனடியாக அகற்றிவிட வேண்டும். முடிந்தால் அதை நன்கு பராமரித்து மீண்டும் வளர செய்யலாம்.

4.வீடுகளில் மூளைகளில் நீண்ட நாட்களாக இருந்து வந்த இரும்பு பொருட்கள் மற்றும் உடைந்த சாதனங்கள் பயன்படுத்த முடியாத பழைய மின்னணு பொருட்கள் ஆகியவற்றை அகற்றி விடுவது நல்லது.

நவராத்திரி அம்பிகையை வீட்டிற்கு அழைக்கும் முன்பு இந்த 7 பொருட்களை அகற்றி விடுங்கள் | 7 Things Should Remove Before Navarathri Festival

தோல்வியை அடியோடு வெறுக்க கூடிய ராசிகள் யார் தெரியுமா?

தோல்வியை அடியோடு வெறுக்க கூடிய ராசிகள் யார் தெரியுமா?

5. பூஜை அறையில் நீண்ட நாட்கள் பயன் படுத்தாத பொருட்கள் இருந்தாலும் அதனை உடனடியாக அகற்றி விடுவது நல்லது.

6. மந்திரங்கள் ஸ்லோகங்கள் மற்றும் ஆன்மீக கருத்துக்கள் கொண்ட புனித நூல்கள் கிழிந்து சேதமடைந்திருந்தால் அதனையும் அலட்சியமாக வைத்திருக்காமல் மரியாதை உடன் கையாள்வது அவசியம்.

7. குறிப்பாக வட கிழக்கு பகுதியை தேவையற்ற பொருட்கள் மற்றும் பழைய காகித கோவில்கள் நிரப்பாமல் பார்த்துக் கொள்வது அவசியம் 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US