அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 7 ஆன்மீக தகவல்
நம்மை இந்த பிரபஞ்சம் கவனித்து கொண்டு இருக்கிறது.நன்மையோ தீமையோ அவை நடக்கும் முன் நமக்கு அறிகுறி காட்டி விடும்.அப்படியாக நம்முடைய வீடுகளில் நாம் கவனிக்க வேண்டிய மற்றும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக தகவலை பற்றி பார்ப்போம்.
1.பொதுவாக வீடுகளில் பல்லி நடமாடுவதை காணமுடியும்.ஆனால் யார் வீட்டில் செய்வினை பிரச்சனைகள் இருக்கிறதோ அவர்கள் வீட்டில் பல்லி தங்காது என்பது ஐதீகம்.
2.நாம் கட்டாயம் காலை மாலை வீடுகளில் விளக்கு ஏற்றுவோம்.அவ்வாறு ஏற்றும் பொழுது முதலில் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றிய பிறகே திரி போடவேண்டும்.
3.மனிதனின் மிக பெரிய ஆற்றல்,அவன் செய்யும் செயல் பற்றி அவன் நன்கு புரிந்து கொள்வது தான்.அப்படியாக,கால சூழ்நிலையால் சிலர் தடம் புரண்டு பாவங்கள் செய்து விடுகின்றனர்.
அவ்வாறு செய்த பாவம் அவர்களை மிகவும் மன உலைச்சலுக்கு கொண்டு போயிவிடும்.அப்படியாக தெரியாமல் செய்த பாவத்திற்கு ஒரே வழி இறைவழிபாடும் பிறருக்கு தர்மம் செய்வதே ஆகும்.
4.வீட்டில் சில எதிர்மறை ஆற்றல் சூழ்ந்ததாக எண்ணினால் மருதாணி இலை தூபம் போட நிச்சயம் வீட்டில் நல்ல மாற்றம் காணலாம்.
5.அதே சமயம் மருதாணி வைத்த கைகளை 6 நாட்களுக்கு எமன் நெருங்க மாட்டார் என்பது ஐதீகம்.
6.சிலர் தூக்கமின்மை பிரச்சனையால் அவதி படுவார்கள்.அவர்கள் இரவில் தூங்கும் முன் தலையணை அடியில் மருதாணி இலை வைத்து தூங்க நல்ல உறக்கம் வரும்.
7.சில குடும்பங்களில் திருமணத்திற்கு தடை உண்டாகி கொண்டு இருக்கும்.அவ்வாறு திருமண தடையை சந்திப்பவர்கள் வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கு பிடித்த வெண்ணிற ஆடை அணிந்து வழிபாடு செய்ய விரைவில் திருமணம் கைகூடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |