உங்கள் பூஜை அறையில் இந்த பொருட்கள் இருந்தால் உடனடியாக அகற்றி விடுங்கள்
பொதுவாகவே, நம்முடைய வீட்டை வாஸ்துரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் எப்பொழுதும் சுத்தமாக வைத்துக் கொண்டிருப்பது அவசியம் என்று சொல்லப்படுகிறது.
அதைவிட முக்கியமாக தேவை இல்லாத பொருட்களை நாம் வீடுகளில் தேக்கி வைத்திருப்பது என்பது நமக்கு ஒரு எதிர்மறை விளைவுகளை கொடுக்க கூடும் என்று சொல்கிறார்கள்.
அந்த வகையில், வீடுகளில் தினமும் கோவிலுக்கு நிகராக போற்றி வழிபாடு செய்யக்கூடிய அறை பூஜையறையாக உள்ளது. இந்த பூஜை அறையை நாம் சரியாக அமைத்து இருப்பது அவசியமாக உள்ளது. இந்த பூஜை அறையில் நாம் தவறியும் செய்யக்கூடாத 7 தவறுகளை பற்றி பார்ப்போம்.

1. முடிந்த வரை பூஜை அறையில் அதிக சிலைகள் வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது என்று சொல்கிறார்கள்.
2. பூஜை அறைக்கு அருகில் கழிப்பறை இருப்பதை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
3. பூஜை அறையில் ஒரு பொழுதும் இன்வெர்ட்டர் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் போன்ற நெருப்பு சாதன பொருட்கள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும்.
4. பூஜை அறை எப்பொழுதும் இருட்டாக இருக்கக் கூடாது. இரவு நேரங்களில் ஒரு சிறிய மின் விளக்கை போட்டு வைத்திருப்பது அவசியமாக உள்ளது.
5. பூஜை அறையில் தேவையில்லாத பொருட்களை வைக்காதீர்கள். உடனடியாக அகற்றி விடுவது அவசியம்.

6. பூஜை அறையில் உடைந்த சுவாமியின் சிலை படங்கள் இருந்தாலும் உடனடியாக அகற்றி விடுங்கள். பூஜைக்கு உகந்த எந்த பொருட்கள் உடைந்து இருந்தாலும் அதை நீங்கள் பயன்பாட்டிற்கு உட்படுத்தாமல் அகற்றி வைப்பது நல்லது.
7. பூஜை அறையில் எப்பொழுதும் வாடிய மலர்களை அங்கேயே தேக்கி வைக்க கூடாது. உடனடியாக அகற்றி விடுவது அவசியமாகும்.
நம்முடைய வீடுகளை எந்த அளவிற்கு சுத்தமாகவும் தேவையில்லாத பொருட்களை அகற்றியும் வைக்கின்றோமோ அந்த அளவிற்கு நம்முடைய மனநிலையில் மாற்றங்கள் கிடைக்கிறது.
அது நம்முடைய ஆன்மாவையும் கிரக அமைப்புகளையும் சுத்தம் செய்து ஒரு நேர்மறைஆற்றல் கொடுக்கிறது என்பதால் ஒரு சில விஷயங்களை கட்டாயமாக நாம் கடைபிடிப்பது நிச்சயம் வாழ்வில் நல்ல வெற்றியை கொடுக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |