கோயில் மற்றும் பூஜை செய்யும் பொழுது செய்யக்கூடாத 8 தவறுகள்
எல்லோருமே இந்த வாழ்க்கையில் தெரிந்து தவறுகளை செய்வதில்லை. பல நேரங்களில் அறியாமையால் தவறுகளை செய்து விடுகின்றோம். ஆனால் அதை திருத்திக் கொள்வதே ஒரு நல்ல மனிதனுக்கு உரிய குணமாகும். அந்த வகையில், கோயில் மற்றும் பூஜை செய்யும்பொழுது செய்யக்கூடாத 8 தவறுகளை பற்றி பார்ப்போம்.
1. ஒருவர் சூடு படுத்திய எண்ணெயில் கடவுளுக்கு எப்பொழுதும் தீபம் ஏற்றக்கூடாது.
2. அதை போல், காமாட்சி அம்மனுக்கு மஞ்சள், குங்குமம் வைக்காமல் ஏற்றக்கூடாது.
3. விளக்கு அணையும் போது அதனை பார்க்க கூடாது.
4. கோயிலுக்கு சென்று அமராமல் அவசர அவசரமாக வீடு திரும்புதல் கூடாது.

5. கோயில் குளங்களில் கல் எரிந்து எப்பொழுதும் விளையாட கூடாது. சிறுவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு இதனை கற்றுக் கொடுக்க வேண்டும்.
6. திருவிழாவை மட்டும் பார்த்துவிட்டு கடவுளை தரிசிக்காமல் நிச்சயம் நாம் வீடு திரும்புதல் கூடாது.
7. கடவுளை வணங்கும் பொழுது ஏதாவது நாம் சாப்பிட்டுக் கொண்டே தரிசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
8. கோயில் கோபுரத்தின் நிழலை நாம் தவறியும் மிதிக்க கூடாது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |