தர்ப்பணம் செய்யும் முன் இந்த விஷயங்களை கட்டாயம் மறந்து விடக்கூடாது

By Sakthi Raj Aug 07, 2024 07:07 AM GMT
Report

நம்முடைய இறந்த முன்னோர்களை நினைத்து செய்வதின் பெயர் தான் தர்ப்பணம். ஒருவர் தர்ப்பணம் செய்ய போகிறார் என்றால் அவர்கள் கடைபிடிக்கவேண்டிய முக்கியான விஷயங்களை பற்றி பார்ப்போம்.

அதாவது ஒருவர் வீட்டில் தர்ப்பணம் செய்யவேண்டும் என்று முடிவு எடுத்துவிட்டால் தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்துகொள்ளக்கூடாது.

மேலும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து மூடிக்கும் வரையிலும் ,வீட்டில் எப்பொழுதும் இறைவழிபாடு செய்வதை நிறுத்தி தர்ப்பணம் செய்த பிறகு வழக்கம் போல் தர்ப்பணம் செய்யத்தொடங்கலாம்.

தர்ப்பணம் செய்யும் முன் இந்த விஷயங்களை கட்டாயம் மறந்து விடக்கூடாது | Aadi Amavasai Tharpanam Seiyum Murai

மேலும் ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4, மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12, வைத்ருதி 12, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4, பூர்வேத்யு 4 நாட்கள். இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

மேலும் ஒருவர் ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளைநான்ஏற்றுக்கொள்வதில்லைஎனவிஷ்ணுவும்சிவனும்கூறியுள்ளனர்.

மகாளயபட்சம் 15 நாட்களும் பித்ருகளுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெற வேண்டும். அந்த 15 நாட்களில் உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிரார்த்தம் செய்ய வேண்டாம் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் பிறகு கட்டாயமாகச் செய்ய வேண்டும்.

கேட்ட வரம் உடனே அருளும் ஆடிப்பூரம் ஆண்டாள் வழிபாடு

கேட்ட வரம் உடனே அருளும் ஆடிப்பூரம் ஆண்டாள் வழிபாடு


சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு, உண்ணக்கூடாது.

குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளய சிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.

 கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு.

திருவாலங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது. 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.
+91 44 6634 5009
Direct
+91 44 6634 5009
WhatsApp
bakthi@ibctamil.com
Email US