ஆடி 1 நாம் செய்யவேண்டிய பரிகாரம்
ஆடி மாதம் என்றாலே நம் நினைவிற்கு வருவது அம்மன் தான்.அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் சிறப்பான விழாக்கள் நடைபெரும்.
அப்படி இருக்க ஆடி மாதம் என்றாலே நம் முதலில் தோன்றுவது அம்மன் கோயில்களில் கூழ் ஊற்றுவது.அவ்வளவு சிறப்பாக கோயில்களில் ஆடி மாதம் கொண்டாடப்படும்.
இப்பொழுது ஆடி மாதத்தில் நாம் குல தெய்வத்தின் அருளை எப்படி பெறவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம். வருகின்ற ஜூலை 17 ஆம் தேதி ஆடி மாதம் பிறக்க இருக்கிறது.
அன்றைய நாளில் வேப்பிலை எடுத்து நாம் வீட்டு நிலை வாசலில் எதாவது ஒரு இடத்தில வைத்து விட வேண்டும்.பிறகு தீபம் ஏற்ற நம் வீட்டில் குல தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூர்ணமாக கிடைக்கும்.
நாம் சாதாரணமாக வேப்பிலை என்று நினைத்து விடக்கூடாது.வேப்பிலைக்கு பல மகிமைகள் இருக்கிறது.
ஆன்மீக ரீதியாகவும் ஆரோக்கிய ரீதியாகவும் வேப்பிலைக்கு சக்திகள் அதிகம்.மேலும் வேப்பிலை அம்மனுக்கு உகந்த ஒன்றாகும்.
ஆதலால் எந்த தயக்கமும் இல்லாமல் வேப்பிலையை வீட்டில் வைத்து வழிபாடு செய்ய அம்மன் மட்டும் குல தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூர்ணமாக கிடைக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |