ஆடி பூரம் வழிபாடு அன்று மறக்காமல் நாம் வீட்டில் செய்ய வேண்டியவை
ஆடி மாதம் என்றாலே சிறப்பு வாய்ந்த மாதம். அப்படியாக அந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சிறப்புகள் மிகுந்தது. நாம் ஆடி மாதத்தில் வரும் ஆடி பூரம் பற்றி கேள்வி பட்டு இருப்போம்.
அதாவது 27 நட்சத்திரங்களில் 11வது நட்சத்திரம் தான் பூரம் பிற மாதங்களில் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடி மாதத்தில் வரும் பூர நட்சத்திரம் தான் மிகவும் விஷேசம் நிறைந்தது.
இந்த 2024 ஆம் ஆண்டு ஆடிப்பூரம் ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை அன்று வருகின்றது. பூரண நட்சத்திரமானது ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6.42 மணி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு 9.3 வரை உள்ளது.
ஆனால், ஆகஸ்ட் 7ஆம் தேதி முழுவதும் ஆடிப்பூரண வழிபாட்டினை மேற்கொள்ளலாம். இப்பொழுது ஆடி பூரம் அன்று நாம் என்ன செய்யவேண்டும், எப்படி வழிபாடு செய்யவேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஆடி மாத பூர நட்சத்திரத்தில் அன்று தான் அம்பாள் தோன்றியதாக புராணங்கள் சொல்லுகின்றது. அதுமட்டுமின்றி, பன்னிரு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் இந்த ஆடிபூரம் நட்சத்திரத்தில் தான் அவதரித்தாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் அவதரித்த நாளையே ஆடி பூரமாக கொண்டாடுகின்றோம்.மேலும் சிவபெருமானின் துணைவியரான அன்னை பார்வதி தேவியும் மண்ணில் அவதரித்த நாளும் இந்த ஆடி பூரத்தில் தான்.
அன்றைய தினத்தில் தான் அன்னை பராசக்திற்கு வளைகாப்பு திருவிழா நடத்தப்படும்.
எனவே, இந்நாளில் அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்து கோவில்களில் பிரசாதமாக கொடுக்கும் வளையல்களை பெண்கள் அணிந்து கொண்டால் வீட்டில் தடை பட்டு இருந்த சுப நிகழ்ச்சிகள் நடக்கும் மற்றும் நீண்ட நாள் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |