கஷ்டங்கள் விலக ஆடி மாதம் முடியும் முன் செய்யவேண்டிய முக்கியமான வழிபாடு
ஆடி மாதம் இன்னும் சிறிது காலங்களில் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த ஆடி மாதம் முடிவதற்குள் நாம் இந்த ஒரு வழிபாட்டை செய்வதினால் நமக்கு ஏற்பட்ட துன்பமும் நமக்கு ஏற்பட்ட கண் திருஷ்டிகளும் விலகும் என்கிறார்கள். அதை பற்றி பார்ப்போம்.
மாதங்களில் மிகச்சிறந்த மாதமாக ஆடி மாதம் இருக்கின்றது. இந்த மாதமானது அம்மன் வழிபாட்டிற்கு உரிய முக்கியமான மாதமாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் பல்வேறு ஊர்களில் இருக்கும் அம்மன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும், நேர்த்திக்கடன்களும் செலுத்தி பக்தர்கள் வழிபாடு மேற்கொள்வார்கள்.
அதேப்போல் இந்த ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாடு செய்வதற்கும் மிகச் சிறந்த மாதமாகும். அந்த வகையில் ஆடி மாதம் வருகின்ற ஆகஸ்ட் 16ம் தேதி முடிவடைய இருக்கும் நிலையில் நாம் இந்த ஒரு வழிபாட்டை செய்வதினால் நமக்கு பல பலன்கள் கிடைக்குமாம்.
நம்முடைய வாழ்க்கையில் பிற தெய்வங்களுடைய அருள் கிடைக்க வேண்டும் என்றால் நமக்கு முதலில் நம்முடைய குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக இருக்க வேண்டும்.
அப்படியாக, இந்த ஆடி மாதம் முடிவடைவதற்குள் நம்முடைய குலதெய்வம் ஆலயம் சென்று குடும்பத்துடன் பொங்கல் வைத்து வழிபாடு செய்யலாம் இல்லை என்றால் குலதெய்வம் ஆலயங்களுக்கு நாம் அன்னதானம் செய்வதற்கான பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.
இதில் இன்னும் விசேஷமானது குலதெய்வம் ஆலயங்களுக்கு வெல்லம் வாங்கி கொடுத்து வழிபாடு செய்வது. பொதுவாக வெல்லம் கட்டியாக இருந்தாலும் அது விரைவில் கரையக்கூடிய தன்மை கொண்டது.
அதனால் வெல்லம் வாங்கி கொடுத்து வழிபாடு செய்யும் பொழுது நம்முடைய கடினமான துன்பங்களும் வெல்லம் போல் மிக விரைவில் கரைந்து விடும் என்பது நம்பிக்கை. பலருக்கும் அவர்களுடைய குலதெய்வம் பெண் தெய்வமாக இருப்பார்.
அவர்கள் கட்டாயம் இந்த ஆடி மாதம் முடிவதற்குள் இந்த ஒரு வழிபாட்டினை செய்வதால் அவர்களுடைய குடும்பத்தில் சந்தோஷம் பொங்கும். குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும் வீடுகளில் நாம் குலதெய்வத்தை நினைத்து விளக்கேற்றி சர்க்கரை பொங்கல் நெய்வேத்தியம் படைத்து குடும்பத்துடன் பிரார்த்தனை செய்து கொண்டாலும் நல்ல பலன் கிடைக்கும்.
மனிதனுக்கு எவ்வளவு இக்கட்டான சூழ்நிலை இருந்தாலும் குல தெய்வத்தின் அருள் இருந்தால் கடைசி நொடியிலும் மிகப்பெரிய மாற்றங்களும் வெற்றிகளும் காணலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







