நல்லதே நடக்க ஆடி மாதத்தில் வழிபாடு செய்யவேண்டிய தெய்வங்கள்
தமிழ் மாதம் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புகள் கொண்டது. அதிலும், குறிப்பாக ஆடி மாதம் வழிபாட்டிற்கு உரிய மிகவும் கொண்டாடட்டம் ஆன மாதம் ஆகும். இந்த மாதம் முழுவதும் அம்மனுக்கு உரிய மாதம் என்றே சொல்லலாம்.
மேலும், பெண்கள் இந்த மாதத்தில் தங்கள் குடும்ப நலனுக்காக பல விரதங்களும் வழிபாடுகளும் பூஜைகளும் செய்வார்கள். அப்படியாக, ஆடி மாதத்தில் குடும்பத்தில் நன்மைகள் நடக்க எந்த தெய்வங்களை வழிபாடு செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
வழிபாடு செய்யவேண்டிய முக்கியமான நாட்கள்:
1. ஆடி மாதத்தில் மிக முக்கிய நாளாக ஆடி வெள்ளிக்கிழமை இருக்கிறது. இந்த வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் விரதம் இருந்து பூஜை செய்து வழிபாடு செய்தால் குடும்பத்தில் செல்வமும் மகிழ்ச்சியும் சேரும்.
2. ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசையில் தவறாமல் நாம் முன்னோர்கள் வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் பித்ருகளுக்கு திதி, தர்ப்பணம், தரிசனம் செய்யும் நாள்.
3. முருக பக்தர்கள் கட்டாயம் ஆடி கிருத்திகை முருகப்பெருமானை விரதம் இருந்து வழிபாடு செய்தால் அவர்கள் கேட்ட வரம் கிடைக்கும்.
4. ஆடிப்பெருக்கு ஆடி மாதத்தில் அனைவரும் கொண்டாடக்கூடிய விஷேசமான நாள். இந்த நாளில் ஆற்றங்கரையில் வாழும் மக்கள் அம்மனுக்கு பூஜை செய்வார்கள். இதை காவிரித் திருவிழா என்றும் கூறப்படும்.
5. வைணவ பக்தர்கள் அனைவரது மனதில் குடிக்கொண்டு இருக்கும் ஆண்டாள் அம்மன் அவதரித்த தினம் ஆடிப்பூரம் ஆகும். அந்த நாள் திருமாலுக்கும் ஆண்டாளுக்கு வழிபாடு செய்யவேண்டிய முக்கியமான நாளாகும்.
6. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்பவர்கள் ஆடி கிரிவல நாளில் சென்று வழிபாடு செய்தால் அவர்களுக்கு இறைவனின் அருளால் மோட்சம் கிடைக்கும்.
ஆடி மாதத்தில் வழிபட வேண்டிய தெய்வங்கள்:
ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு உரிய வழிபாட்டு நாள் என்பதால் அன்றைய நாளில் பார்வதிதேவி, மாரியம்மன், துர்கை, காளி, கனாகா துர்கை, மின்னாலேஸ்வரி மகாலட்சுமி அம்சமான குத்து விளக்கு பூஜை செய்து வழிபாடு செய்யவேண்டும்.
ஆடி மாதத்தில் செய்யவேண்டியவை:
ஆடி மாதத்தில் முடிந்த வரையில் அதிகாலை எழுந்து குளித்து வீடுகளில் விளக்கு பூஜை செய்ய வேண்டும். பெண்கள் விரதம் இருந்து கட்டாயம் காலையிலும், மாலையிலும் அம்மன் பாடல்கள் அபிராமி அந்தாதி, லலிதா சஹஸ்ரநாமம் பாட வேண்டும். ஆடி வெள்ளிக்கிழமையில் மாக் கோலம் போட்டு செம்மண் காவி இட வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







