ஆடி மாதம் பௌர்ணமியின் சிறப்பும் வராஹி அம்மனின் வழிபாடும்
பௌர்ணமி நேரம்
20-7-2024 சனிக்கிழமை மாலை 06:10 முதல் 21-7-2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 04:51 வரை.
ஒருவர் பௌர்ணமி அன் று செய்யும் அன்னதானம் எவ்வளவு பெரிய பெரிய கர்ம வினைகளையும் நீக்கும்.
அன்னை வாராஹி, அய்யன் சிவ பெருமான், அப்பன் முருகன், திருமால் அனைவருக்கும் உகந்த நாள் பௌர்ணமி.
அன்றைய நாளில் அம்மனை வழிபட நீண்ட கால தீராத கடன், தொழில் இழப்பீடு மற்றும் தொழில் முடக்கம், கணவன் மனைவி கருத்து வேறுபாடு மற்றும் பிரிவினை, திருமண தடை தோஷம் நீங்க, குழந்தை பாக்கியம், காதல் விவகாரம், வசிய பிரச்சனை, பணம் கொடுக்கல் வாங்கலில் இருக்கும் பிரச்சனை, கூட்டு தொழில் மன கசப்பு, பில்லி சூனிய ஏவல் கண்திருஷ்டி துன்பங்களிலிருந்து விடுபட, நேர்முக மறைமுக எதிரிகள். கர்மவினைகள், தீராத நோய், வம்பு வழக்குகள் எல்லாம் விலகி நிம்மதி உண்டாகும்.
மேலும் அன்றைய நாளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கு, எருமை தயிர், பயிர் வகைகள் மாதுளை, அண்ணாச்சி, செங்கரும்பு, கருப்பு உளுந்து வடை.
அடுத்ததாக ஒரு ஜோடி மண் அகல் விளக்கு என்றாலும் பரவாயில்லை அதில் தீபம் ஏற்றி உகந்த மலர் சூடி உகந்த நைவேத்தியம் வைத்து காயத்திரி மந்திரம் பாராயணம் செய்து வழிபாடு செய்யவேண்டும்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |
.