பெண்கள் பின்பற்ற வேண்டிய முக்கியமான 3 ஆன்மீக ரகசியங்கள்
ஆன்மீகம் என்பது அனைவரும் பின்பற்றவேண்டிய முக்கியமான ஒரு விஷயம் ஆகும். அவை நம் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களையும் மாறுதல்களையும் கொடுக்கக்கூடியது. அப்படியாக, பெண்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய முக்கியமான ஆன்மீக குறிப்புகள் பற்றிப்பார்ப்போம்.
1. பெண்களுக்கு திருமாங்கல்யம் என்பது மிகவும் முக்கியமான அம்சமாகும். அதை பொன் சங்கிலியில் மட்டும் அணிவது போதுமானது அல்ல. கட்டாயமாக நூல் அல்லது தாலிச் சரட்டில் கோர்த்து அணிவதே சிறந்த பலன் அளிக்கும். மேலும், தாலி நூலில் பஞ்சபூதங்களின் சக்திகள் நிறைந்து உள்ளதாக சாஸ்திரங்கள் சொல்கிறது.
2. பெண்கள் கோயிலுக்கு விளக்கு ஏற்ற எடுத்து செல்லும் எண்ணெய்யை ஒரு பொழுதும் அங்கு பிறர் ஏற்றி வைத்த விளக்கில் ஊற்றக்கூடாது. அதை கோயிலில் உள்ள ஸ்ரீமுக விளக்கில் மட்டுமே ஊற்ற வேண்டும். இது ஒரு மிக சிறந்த பரிகார பலன்கள் ஆகும்.
3. வீடுகளில் பெண்கள் கோலம் போடும் பொழுது கட்டாயம் சில முக்கியமான விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, பெண்கள் கோலம் போடும் பொழுது ஒரு பொழுதும் தெற்கே நின்று கோலம் போடக்கூடாது.
அதேப்போல், கோலத்தை முடிக்கும் பொழுது தெற்கு நோக்கி முடிவதையும் தவிர்க்க வேண்டும். காரணம், தெற்கு திசை என்பது எமனுக்கு உரிய திசை ஆகும். ஆதலால் அந்த திசையை நோக்கி கோலம் தொடங்குவதையும், முடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |