கோவிலுக்கு சக்தி எங்கிருந்து வருகிறது?
இந்தியா ஒரு ஆன்மீக பூமி, இங்கு பெரும்பாம்மையான மக்கள் ஆலயம் செல்கின்றனர், நமக்கு எந்த ஒரு பிரச்சனையையும் கூறி ஆறுதல் தேறும் இடமாக ஆலயம் உள்ளது.
இன்று நேற்று அல்ல பல்லாயிரம் வருடமாக இங்கு பிரம்மாண்ட ஆலயங்கள் நமது மண்ணை ஆண்ட மன்னர்களால் நிர்மணிக்கப்பட்டுள்ள இந்த ஆலயங்களில் என்ன இருக்கிறது, அங்கு போய் கேட்கும் கோரிக்கைகள் எப்படி நிறைவேறுகின்றன,
எந்த சக்தி இதையெல்லாம் கேட்டு பதில் அளிக்கின்றது, கோவிலில் ஒரு ரகசியம் உள்ளது, ஒரு கோவில் காட்டுவதற்கு முன் அதனை கட்ட சரியான காந்த புல பிரதிபலிப்பு.
அதாவது Magnetic Field Reflection கொண்ட இடத்தை கைத்தேர்ந்த புவியியல் வல்லுநர்களால் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்தில் சில வசிய உரு ஏற்றப்பட்ட அதாவது தகடுகள் மற்றும் சில அரியவகை கற்கள், ரத்தினங்களை வைத்து பல நாட்களாக முறையாக மந்திரங்கள் கூறி அதனை ஒரு மின்களனாக மாற்றுகின்றனர்.
அதற்கு மேல் வைக்கப்படும் சிலையானது ஒரு கருவி தான் விளங்கும் படி கூற வேண்டுமானால், அது ஒரு Mobile Phone மாதிரி கீழே இருக்கும் பொருட்கள் தான் இந்த Mobile ன் Battery, ஒவ்வொரு நாளும் சிலைக்கு மேலே இருக்கும் கலசம் வழியாக மின்னூட்டம் அந்த Battery ஐ அடைந்து நிரம்புகின்றது.
மேலே வைக்கப்பட்டிருக்கும் சிலை அந்த சக்தியை உள்வாங்கி Recharge ஆகிறது, அந்த சிலையின் மேல் தண்ணீர் ஊற்றும் போதும், நெருப்பினை (ஆரத்தி) காட்டும் போதும் ஒலி (மணி) எழுப்பும் போதும் அந்த சக்தி எதிரே இருப்பவர்களின் உடலில் பாய்கிறது.
அந்த மின்னூட்டம் அல்லது காந்தம் வெளிப்படும் போது உங்களுக்கு ஒரு விதமான அமைதியோ அல்லது பரவசமோ ஏற்படும், இது தான் கோவில் சிலையின் ரகசியம்.
கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது கோவில் கோபுரங்கள் இடி தாங்கியாக செயல்படுவதால் கோவில் இருக்கும் இடங்களில் மின்னல் தாக்குவது இல்லை.
அதனால் கூறப்பட்டது ஆரம்ப கால கோவில்கள் பள்ளிக்கூடங்களாக இருந்து வந்தன. திருமணங்கள் ஏனைய சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடமாகவும் இருந்து வந்தன, இன்றும் உள்ளன இது பழைய கோவில்களுக்கு பொருந்தும்., எல்லா கோவில்களும் இப்படி கட்டி இருக்கிறார்களா என்றால் தெரியாது என்பது பதில்.
சில சித்தர்கள் சமாதிகள் கோவில் இருப்பதை பார்த்திருப்போம், அவர்கள் தங்கள் உடலில் இருந்து வரும் ஆற்றல் நேரடியாக அந்த சிலைக்கு சென்று அதனை தரிசிப்போரை வளப்படுத்தும் படி சமாதியாகியிருப்பார்கள், இது கோவிலில் தான் நடக்கும் என்று நினைக்க வேண்டாம்.
உங்கள் உடலையே இந்த மாதிரி மாற்றம் அடைய செய்ய முடியும் மூலாதரத்தில் உறங்கிக்கொண்டு இருக்கும் குண்டலினி சக்தியை முறையான குருவால் தூண்டப்பட்டு தினமும் துரியம் வழியாக சக்தியை கிரகித்து உள்வாங்க முடியும், இதையே யோக பயிற்சி என்று கூறுவர்.
உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே
என்ற திருமுலர் பாடல் இந்த பார்வையில் எழுதப்பட்டதே, நாமும் நாம் உடலை ஆலயமாக மாற்றுவோம் நம்முடன் பழகும், இருக்கும், பேசும், அனைவருக்கும் அந்த மின்னூட்டம் பாயச் செய்வோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |