ஒலியில் இருந்து பாதுகாக்கப்படும் மரகத நடராஜர் சிலை
உத்தர கோசை மங்கையில் தான் முதல் சிவன் கோயில் தோன்றியதாக வரலாறு.அங்கு இருக்கும் நடராஜர் சிலை 5 அடி உயரம் கொண்ட பச்சை மரகதக் கல்லால் ஆன சிறப்புகள் கொண்டது.
அந்த நடராஜர் பெயர் ரத்தின சபாபதி. அவரையே ஆதிசிதம்பரேசர் என்று அழைக்கின்றனர். ஒளி வெள்ளத்தில் இந்த சிலையைப் பார்க்கும்போது உயிர்ப்புடன் இருப்பது போல் தோன்றுவதை நாம் உணர முடியும்.
மேலும் இந்த நடராஜர் சிலையில் என்ன விஷேசம் என்றால் நம் மனித உடலில் உள்ளது போல் பச்சை நரம்புகள் போல் அந்த சிலையில் இருப்பதை காணமுடியும்.
ஆக இந்த சிலையானது உலக அதிசயத்தில் ஒன்றாக இருக்கிறது. இந்த நடராஜர் விக்ரகம் மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்பதால் ஒலி, ஒளி அதிர்வுகளை தாங்க இயலாத தன்மை கொண்டது.
எனவே இந்த கோவிலில் மேளதாளங்கள் எதுவும் இசைக்கப்படுவதில்லை. எந்த விதத்திலும் விக்கிரம் சேதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஆண்டு முழுவதும் சந்தனக் காப்பு சாத்தப்பட்டு பாதுகாத்து வருகிறார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |