அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
By Yashini
திருப்பதி மாவட்டம் அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோவிலில் வரும் 17ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
இதையொட்டி கோவிலை சுத்தம் செய்யும் நிகழ்வான ஆழ்வார் திருமஞ்சனம் நாளை நடைபெற உள்ளது.
கோயில் ஊழியர்கள், பக்தர்கள் மற்றும் அர்ச்சகர்கள் இணைந்து கோவில் வளாகம் முழுவதையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுவார்கள்.
ஆலய சுத்திகரிப்புக்குப் பிறகு, 11.00 மணிக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
பிரம்மோற்சவ விழா நாட்களில் தினமும் காலை மற்றும் மாலை இருவேளைகளிலும் வாகன சேவைகள் நடைபெறும்.
இதைத்தொடர்ந்து, முக்கிய நிகழ்வாக 20 ஆம் திகதி கல்யாண உற்சவம் நடைபெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |