2500 ஆண்டு பழமையான மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இவ்வளவு சிறப்புகள் நிறைந்ததா?
இன்று உலகம் முழுவதும் பேசக்கூடிய ஒரு முக்கியமான செய்தி என்றால் 17 வருடம் கழித்து நடக்கக்கூடிய மீனாட்சியம்மன் உடைய கும்பாபிஷேகத்தை பற்றி தான். மதுரையை ஆளக்கூடிய பேரரசியாக விளங்கக்கூடிய அம்மா மீனாட்சியின் அருளாசி ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவர்களுக்கு வாழ்க்கையில் பின்னடைவு என்கின்ற ஒரு நிலையே இல்லை.
அது மட்டும் அல்லாமல் மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு முதல் பூஜையும் மரியாதையும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. பிறகு தான் சுந்தரேஸ்வரருக்கு பூஜைகள் நடைபெறுகிறது. அப்படியாக இந்த கோயிலின் சிறப்புகளை பற்றி பார்ப்போம்.

திருக்கோயிலின் வரலாற்றுப் பின்னணி தல வரலாறு:
புத்திர காமேஷ்டி யாகம்:
மலையத்துவச பாண்டிய மன்னனும் காஞ்னமாலையும் நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்திருக்கிறார்கள். அவர்கள் நடத்திய யாகத்தின் அக்னியில் இருந்து மூன்று தனங்களுடன் தோன்றியவள் அன்னை தடாதகை பாராட்டியார்.
ஆனாலும் பிறந்த குழந்தைக்கு மூன்று தனங்கள் இருக்கிறது என்று பெற்றோர்கள் வருத்தம் கொள்ள அசரீரியாக ஒரு குரல், அன்னை மீனாட்சி அம்மன்என்று ஒரு நாள் அவள் மணம் முடிக்கக்கூடிய மணமகனை பார்க்கிறாளோ அன்று இந்த தனம் மறையும் என்றது.
அரசாட்சியும் திக்விஜயமும்:
அம்மா மீனாட்சி சிறுவயதில் இருந்தே போர் கலைகளிலும் நீதி சாஸ்திரங்களையும் கற்று மதுரையின் அரியணை ஏறிய அரசியாகவும் எட்டு திசைகளையும் வென்று கயிலாயத்திற்கு படை எடுத்தாள் என்பத புராணம்.
அங்கே அவள் அவளுக்குரிய கணவன் சிவபெருமானை பார்த்த கணத்தில் அவருடைய மூன்றாவது தனம் மறைந்தது. பிறகு உணர்கிறார் இவரே என்னுடைய கணவர் என்று. சிவபெருமான் அன்னையை மணம் முடித்துக் கொள்வதற்கு ஒரு தேதியை சொல்லி மதுரைக்கு அனுப்பி வைக்கிறார்.
மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம்:
பிறகு சிவபெருமான் மதுரைக்கு சுந்தரேஸ்வரராக எழுந்தருளி அன்னை மீனாட்சி தேவியை திருக்கல்யாணம் புரிகிறார். பிறகு மதுரையை ஆளும் மன்னராகவும் அம்மனை முழுமுதற் பேரரசியாக அமைத்து திருவிளையாடல்களை நடத்துகிறார்.

கட்டிடக்கலை மற்றும் வரலாற்றுச் சிறப்புகள்:
சங்க காலத் தொன்மை:
மீனாட்சி அம்மன் உடைய திருக்கோயில்கள் சிலப்பதிகார முதல் கலித்தொகை முதலான சங்க இலக்கியங்களில் இந்த கோவிலின் பெருமைகள் போற்றப்படுகிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகான கும்பாபிஷேகம் — பின்னணியும் சவால்களும்: ஒரு கோவிலின் ஆகம சாஸ்திர விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.
ஆனால், இதற்கு முன்னர் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. வழக்கப்படி 2021 ஆம் ஆண்டு நடைபெற வேண்டும்.
ஆனால், 2018 பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி அன்று வீரவசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்து காரணமாகவும், தொடர்ந்து வந்த கொரோனா பெருந்தொற்றுப் பொதுமுடக்கத்தாலும் தள்ளிப்போனது.
சேதமடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வீரவசந்தராயர் மண்டபத்தை, பழமை மாறாமல் அரிய வகைக் கருங்கற்களைக் கொண்டு செதுக்கிப் புனரமைப்பது ஒரு பெரும் சவாலாக இருந்தது.
பிறகு இன்று அன்னைக்கு மிகப்பெரிய அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மதுரை மாநகரத்திற்கு மட்டுமல்லாமல் உலகளாவிய இருக்க கூடிய மக்களுக்கு ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |