மீனாட்சி அம்மன் சன்னதி வாசலில் ஏன் கோபுரம் இல்லை?
மதுரை என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் தான். மேலும், தமிழ்நாட்டு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் மிகவும் புகழ்பெற்ற ஒரு திருத்தலமாகவும் விளங்கக் கூடியதாக உள்ளது.
அந்த வகையில், மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு செல்லக்கூடிய ஒவ்வொருவரும் அங்கு இருக்கக்கூடிய பிரம்மாண்டமான கோபுரங்களை பார்த்து வியப்பு உண்டு.
கோபுரங்களில் இருக்கக்கூடிய நுணுக்கமான சிற்பக்கலைகள் இவையெல்லாம் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இவ்வளவு சிறப்புகளை கொண்ட இந்த ஆலயத்தில் ஒரு முக்கியமான வாசலுக்கு மட்டும் கோபுரம் இல்லை என்பதை நாம் பலரும் பார்த்திருக்க தவறி இருக்கின்றோம். அதுதான் மீனாட்சியம்மன் சன்னதியில் உள்ள பிரதான வாசல்.

அங்கே உயரமான கோபுரத்திற்கு பதிலாக அஷ்ட சக்தி மண்டபம் இருக்கிறது. இந்த மண்டபத்தை கடந்து அம்மன் சன்னதி நோக்கி செல்லும் பொழுது பக்தர்களுக்கு இருபுற தூண்களிலும் அரும்பாலிக்க கூடிய எட்டு சக்தி வடிவங்களை பார்க்கலாம். அவை வெறும் சாதாரண அலங்கார சிற்பங்கள் மட்டுமல்ல.
8 அம்பிகையின் திரு உருவங்கள் இங்கு சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. கவுமாரி, ரௌத்ரி, வைஷ்ணவி, லட்சுமி, யக்ஞரூபிணி, சியாமளா, மகேஸ்வரி, மனோன்மணி இவ்வாறு 8 சக்தி வடிவங்களும் மண்டபத்தினுடைய இருபுற தூண்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் இந்த மண்டபம் அஷ்ட சக்தி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது.
எட்டு சக்தி என்றால் தெய்வீக ஆற்றல் நிறைந்தது. அதாவது அந்த எட்டு சக்திகளின் திருவுருவங்களையும் தன்னகத்தே கொண்ட மண்டபம் இதுவாகும். இந்து மண்டபத்தின் வாயிலாக அம்மனை நாம் தரிசனம் செய்கின்ற பொழுது இந்த எட்டு சக்திகளையும் கடந்து செல்கிறார்கள்.
அம்மன் சன்னதியை அடைவதற்கு முன்பாகவே நாம் சக்தியின் பல்வேறு வடிவங்களை நினைவு கூறும் வகையில் இந்த அமைப்பு இருப்பது ஒரு சிறப்பு வாய்ந்தது.
மேலும், இந்த மண்டபத்தின் சிறப்பு அதனுடைய தூண்களில் மட்டும் அல்லாமல் மேலே விதானத்தை நோக்கி பார்க்கின்ற பொழுது அங்கேயும் ஒரு தெய்வீக கதை இருக்கிறது.

சிவபெருமானும் மீனாட்சியம்மனும் மதுரையில் அரசாட்சி புரிந்த காட்சிகள் சிறப்பான வடிவில் இடம் பெற்று இருக்கிறது.
அதில் மதுரை மீனாட்சியம்மன் உடைய அரிசியாக விளங்கிய பெருமையும், சுந்தரேஸ்வரருடன் இணைந்து ஆட்சி செய்த அந்த தெய்வீக காட்சிகளும், மீனாட்சி அம்மனுடைய பட்டாபிஷேக காட்சிகளும் அவருடைய திக்குவிஜயத்துடன் தொடர்புடைய காட்சிகளும் இந்த மண்டபத்தின் விதான சிறப்புகளில் இடம் பெற்றிருக்கிறது.
இவை எல்லாம் நாம் ஒருசேர பார்க்கின்ற பொழுது மீனாட்சியம்மன் வெறும் கோவிலில் வீற்றிருக்கக்கூடிய தெய்வமாக மட்டுமல்லாமல் மதுரையின் அரசியாகவும், சக்தியின் வடிவமாகவும் போற்றப்படுகிறார் என்பதை நாம் தெரிந்து கொள்ள முடிகிறது.
மீனாட்சி அம்மன் சன்னதிக்கு எதிரே இருக்கக்கூடிய பிரதான வாசல் வழக்கமான கோபுரம் இல்லாததை நாம் பார்க்கின்ற பொழுது ஒரு குறையாக தோன்றலாம். ஆனால் அந்த இடத்தில் அஷ்ட சக்தி மண்டபம் அமைந்திருப்பதை நாம் தெரிந்து உடன் அந்த வாசலின் தத்துவம் நமக்கு புரிய துவங்குகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |