ஆபத்தான அங்காரக யோகம்... 12 ராசிகளும் எச்சரிக்கையாக இருக்கனுமாம்
ஜோதிடத்தின் படி நிகழும் அங்காரக யோகத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசியினையும், பேரிழப்பை தவிர்க்க செய்ய வேண்டிய காரியத்தையும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அங்காரக யோகம்
ஜோதிடத்தின்படி நிகழ் கிரகமாக இருக்கு கேது மே மாதத்தில் சிம்ம ராசிக்குள் நுழைந்துள்ள நிலையில், டிசம்பர் 2026 வரை சஞ்சரிக்கின்றார்.
இந்நிலையில் கிரகங்களின் தளபதியும், ஆக்ரோஷமான கிரகமாகவும் கருதப்படும் செவ்வாய் ஜூன் 07ம் தேதி சிம்ம ராசிக்குள் நுழைழைந்துள்ளார்.
சிம்ம ராசியில் செவ்வாய் மற்றும் கேதுவின் சேர்க்கையால் அங்காரக யோகம் உருவாகியுள்ளது. இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றினைந்து பயணிக்கும் போது, நற்பலனை விட தீய பலனே அதிகமாக இருக்கும்.
இந்த அங்காரக யோகத்தின் தாக்கம் மனித வாழ்க்கையில் மட்டுமின்றி, பூமியிலும் காணப்படும். முக்கியமாக பேரழிவுகளையும், விபத்துக்களையும், இழப்புக்களையும் உண்டாக்குமாம்.
அந்த வகையில் சிம்ம ராசியில் உருவாகியுள்ள அங்காரக யோகமானது ஜூலை 28ம் தேதி வரை நீடித்திருப்பதால், இக்காலகட்டத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தற்போது ஒவ்வொரு ராசியினரும் எந்த விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மேஷம்
மேஷ ராசியினருக்கு அங்காரக யோகத்தினால் ஆரோக்கிய பிரச்சனை ஏற்படுவதுடன், வாகனம் ஓட்டும் போது கவனமாகவே இருக்க வேண்டும். இந்த ராசி பெண்கள் தொண்டை, குரல்வளை போன்ற பிரச்சனையை சந்திக்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு இந்த யோகத்தால் மோசமாக இருக்குமாம். வாழ்க்கைத் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்கவும், தொழில் கூட்டாளியுடன் சண்டையும் ஏற்படுமாம். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசியினருக்கு ஆரோக்கிய பிரச்சனையும், அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களுடன் பிரச்சனை ஏற்படுமாம்.
கடகம்
அங்காரக யோகம் கடக ராசிக்காரர்களுக்கு வணிகம் அல்லது வேலையை பாதிப்பதுடன், பணியிடத்திலும் செயல்திறனில் சரிவை சந்திக்கவும் வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கையிலும் அதிக பிரச்சனை எழும்பும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு இந்த யோகத்தால் சொத்து தொடர்பான பிரச்சனையை அதிகமாக சந்திப்பதுடன், மன அமைதி குறைவதுடன், வாழ்க்கையில் அதிகமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமாம்.
கன்னி
கன்னி ராசியினர் உடன் பிறந்தவர்களுடன் பிரச்சனை ஏற்படும். புதிய விடயங்களை தொடங்கும் முன்பு யோசனை செய்யவும். நல்ல நாள் பார்த்து பின்பு தொடங்கவும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த யோகத்தினால் நிதி நிலை மோசமாக பாதிக்கும். முதலீடு செய்வதை இந்த காலத்தில் தவிர்க்கவும். இல்லையெனில் பெரிய இழப்பு ஏற்படுமாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு கோபம் அதிகரிப்பதுடன், கோபத்தை கட்டுப்படுத்தவில்லையெனில் தீவிர பிரச்சனையை சந்திக்க நேரிடுமாம். பெண்கள் நோயினால் அதிகம் அவதிப்பட நேரிடும்.
தனுசு
தனுசு ராசியினர் இந்த யோகத்தினால் நிதி நிலையில் மோசமான தாக்கம் ஏற்படுவதுடன், அதிகமான செலவுகளை செய்யும் நிலையும் ஏற்படும். பெரும்பாலும் மருத்துவ செலவாகவே இருக்கும்.
மகரம்
மகர ராசியினர் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் இருப்பதுடன், உடன் பிறந்தவர்களுடன் அதிக பிரச்சனையை சந்திக்க நேரிடும். ரியல் எஸ்டேட்டில் இருப்பவர்களும் மிக கவனமாகவே இருக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு பாதகமான விளைவுகளை இந்த யோகம் ஏற்படுத்து்ம். இந்த கால கட்டத்தில் புதிய முயற்சிகள், திட்டங்கள் எதையும் தொடங்காமல் இருப்பது நல்லது. இழப்பை சந்திக்க நேரிடுமாம்.
மீனம்
மீன ராசியினருக்கு பயணம் தொடர்பாக பிரச்சனை ஏற்படும். ஆன்மீகத்தில் வழக்கத்தை விட சற்று ஆர்வம் அதிகமாகவே இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |