இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(15/04/2024)
மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்
மேஷம்
உங்கள் செயலில் வேகம் இருக்கும்.பெரும் முயற்சியால் சொத்துகள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும்.உங்கள் முயற்சி இன்று வெற்றிகரமாக அமையும்.
ரிஷபம்
இன்று செய்யும் செயலில் யோசித்து செயல் படுவது நல்லது.எடுக்கும் புதிய முயற்சிகளில் குழப்பம் ஏற்படலாம். மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நன்மை தரும்.கவனமாக செயல் படவேண்டிய நாள்.
மிதுனம்
இன்று செய்யும் செயல்களில் குழப்பங்கள் உண்டாகலாம்,திட்டமிட்டு செய்வதால் மட்டுமே எடுத்த காரியம் சாதகமாகும்.மற்றவர்கள் விஷயத்தில் யோசித்து செயல்படுவது நல்லது.கவனம் தேவை.
கடகம்
பணியிடத்தில் வேலை பளு அதிகரிக்கும்.பொருளாதார நெருக்கடிகளால் மனதில் சங்கடம் உருவாகும். அலைச்சல் அதிகரிக்கும்,குடும்பத்தில் குழப்பம் ஏற்படலாம் அனுசரித்து செல்வது நல்லது.
சிம்மம்
இன்று எதையும் திட்டமிட்டு செயல் பட்டு நினைத்ததை அடைவீர்கள்.நேற்றைய எண்ணம் நிறைவேறும்,உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும்,நில விவகாரத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.
கன்னி
உங்கள் செயல் வியாபாரத்தில் லாபத்தை உண்டாக்கும்,வியாபாரத்தை விரிவு படுத்த முயற்சி செய்வீர்கள். வெளியூர் பணம் லாபமாக அமையும்.எதிர்ப்பார்த்த காரியங்கள் நிறைவேறும்.நினைத்ததை முடிக்கும் நாள்.
துலாம்
நீண்ட நாள் தடைப்பட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடங்குவீர்கள்.இறை நம்பிக்கை அதிகமாகும்.வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும்,நண்பர்கள் உதவியுடன் வெற்றி அடைவீர்கள்.
விருச்சிகம்
இனம் புரியாத குழப்பத்திற்கு ஆளாகலாம்.ஆதலால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகலாம்.சில பிரச்சனைகள் வரக்கூடும்.வாகன பயணத்தில் மிகுந்த கவனம் தேவை.மனதில் தேவை எதிர்பாராத சங்கடம் உருவாகும்.
தனுசு
நேற்றைய முயற்சி லாபமாக அமையும். உங்கள் தேவைகள் பூர்த்தியாகும் நாள்.வாழ்க்கை துணையுடன் இருந்த பிரச்சனைகள் விலகும்.ஒரு சிலர் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.தடை பட்ட வேலையை மீண்டும் தொடங்குவீர்கள்.
மகரம்
உங்கள் செல்வாக்கு உயரும்.வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வியாபாரத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்,பொருளாதார நெருக்கடிகள் விலகும்.எதிர்பார்த்த பணம் வீடு தேடி வரும்.
கும்பம்
உங்களை சுற்றி இருப்பவர்களை தெரிந்து கொள்வீர்கள்.ஆதலால் செய்யும் செயலில் சாதுரியமாக செயல் பட்டு காரியம் சாதிப்பீர்கள்.உறவினர் உதவியால் வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையை பூர்த்தி செய்வீர்கள்.
மீனம்
அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை விலகும்.மனதில் நிம்மதி உண்டாகும்.வியாபாரத்தை விரிவு படுத்த முயற்சி செய்வீர்கள்.அலுவலகத்தில் சில சங்கடங்கள் தோன்றும்.கவனமுடன் செயல்படுவது நல்லது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |