விதியை மாற்றும் மயிலை வீரபத்திரர்.. ஒரு முறை சென்றாலே அதிசயத்தை உணரலாம்
மனிதர்களாக பிறந்த எல்லோருக்குமே அவர்களுடைய கர்ம வினை குறைந்து வாழ்க்கையில் ஏதேனும் ஒரு கட்டத்தில் அதிர்ஷ்டம் என்று ஒன்று நடந்து அவர்களுடைய பிரச்சனைகளிலிருந்து விடுபட மாட்டார்களா என்ற ஏக்கம் இருக்கும். அப்படியாக நம்முடைய வேண்டுதல்களையும் நினைத்த காரியத்தை நிறைவேற்றி கொடுக்கும் தெய்வமாகவும் மயிலை வீரபத்திரர் விளங்குகிறார். அதைப்பற்றி பார்ப்போம்.
சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி மாதவப் பெருமாள் கோயில்களின் அருகே அமைந்திருக்கிறது இந்த வீரப்பத்திர சுவாமி திருக்கோயில். இங்கு மூன்று பௌர்ணமி தினங்களில் வீரபத்திரருக்கு வெற்றிலை மாலை சாற்றி அர்ச்சனை செய்து மனம் உருகி வழிபாடு செய்தால் நம்முடைய வாழ்க்கையில் அதிசயமும் நினைத்த காரியமும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

அதைவிட முக்கியமாக நம்முடைய விதியை மாற்றக்கூடிய அற்புதத்தை இவர் நிகழ்த்துகிறார். மேலும் இங்கு பங்குனி உத்திரத் திருவிழா 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். திருவிழாவின் கடைசி நாளான பங்குனி உத்திர நாளில் இருக்கும் வீரபத்திரருக்கும் அபயாம்பாளுக்கும் திருக்கல்யாணம் மிகச்சிறப்பாக நடைபெறும்.
ஒரு முறை தட்சனை சம்ஹாரம் செய்த வீரபத்திரர் வெற்றிலை கொடியுடன் கூடிய இந்த தலத்திற்கு வந்தவுடன் அவருக்கு அமைதி ஏற்பட்டது. அதோடு வெற்றிலை வாசனை அவருக்கு அமைதியை கொடுத்ததால் அன்று முதல் வெற்றிலை மாலை அவருக்கு மிகவும் பிடித்த பொருளாக மாறியது.
இந்த தலத்தில் வீரபத்திரர் அவருடைய கோபத்தை தனித்த பிறகு தாட்சாயணி அவர் வீரபத்திரர் முன்பு தோன்றி தன் வளர்ப்பு தந்தையின் அறியாமையை மன்னித்து வீரபத்திரரை உயிர் பெற செய்யுமாறு வேண்டிய உடன் வீரபத்திரர் தட்சனைமீண்டும் உயிர் பெறச் செய்தார்.
மீண்டும் உயிர் பெற்ற தட்சன் வீரபத்திரர்யிடம் மன்னிக்குமாறு வேண்டி சாம வேதங்களை சொல்லி வீரபத்திரரை மனம் மகிழும்படி செய்தவுடன் வீரபத்திரர் தட்சனிடம் என்ன வரம் வேண்டும் கேள் என்று கேட்கிறார்.
அதற்கு தட்சன் தன் மகள் தாட்சாயினி திருமண வைபவத்தை தான் காண வேண்டும் என்று கேட்க, வீரபத்திரர் வரும் பங்குனி உத்திர நாளிலே தான் தாட்சாயினை திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார். அப்படியாக தன்னுடைய வளர்ப்பு தந்தைக்கு அபயம் கொடுத்ததால் அன்று முதல் அபயம்பாள் என்று தாட்சாயினிஅழைக்கப்படுகிறார்.

அப்படியாக ஒரு பங்குனி உத்திர நா நாளில் முக்கோடி தேவர்களும் புடைசூழ பெருமாள் தன் தங்கையின் திருமண வைபவத்தை சீர்கொண்டு வந்து நடத்தியதாகவும் அன்று முதல் இந்த திருக்கோவிலில் உள்ள வீரபத்திரர் கல்யாண வீரபத்திரர் என்றே அழைக்கப்படுகிறார் இங்கு பக்தர்கள் அவர்களுடைய வேண்டுதல் நிறைவேற வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்வது வழக்கமாக இருக்கிறது.
இந்த ஆலயத்தில் உள்ள விநாயகப் பெருமான் வடக்கு நோக்கி எழுந்தருள்வது மிகவும் சிறப்பம்சமாக இருக்கிறது. மேலும் ஆலயத்தில் வீரப்பத்திரர், அபயம்பாள், ஆதிசங்கரர், வள்ளி தேவசேனா, சமய சுப்ரமணியர், சரபேஸ்வரர், விருப்பாட்சீஸ்வரர், விசாலாட்சி, சீர் கொண்டு வந்த பெருமாள், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, கால வீர பைரவர், விருட்ச கணபதி, சிவசுந்தர விநாயகர், சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை என அனைத்து தெய்வங்களும் அருள் பாலித்து வருகிறார்கள்