இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?(11/04/2024)
மேஷம் முதல் மீனம் வரையிலான இன்றைய நாளுக்கான ராசிபலன்கள் குறித்து தெரிந்து கொள்வோம்
மேஷம்
மேஷ ராசி நேயர்களுக்கு இன்று மனதில் இருந்த குழப்பங்கள் குறையும்.செயலில் தெளிவு ஏற்படும். பெரியோர்கள் ஆலோசனை முன்னேற்றத்தை கொடுக்கும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.எதிர்பார்த்த வரவுகள் வந்து சேரும்.
ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களுக்கு இன்று இழுபறியாக இருந்த விவகாரம் ஒன்று முடிவுக்கு வரும்.திட்டமிட்டு செயல்படுவதால் மனதில் இருந்த சங்கடங்கள் விலகும். எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் விலகி மனதில உற்சாகம் உண்டாகும்.மதியத்திற்கு மேல் எதிர்பார்த்த வரவு வந்து சேரும்.
மிதுனம்
மிதுன ராசி நேயர்களுக்கு திடீர் என்று சில நெருக்கடிகளுக்கு ஆளாகக்கூடும்.மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும்.அவசர வேலை வந்து அலைச்சல் உண்டாகும். உங்கள் செயல்களில் சங்கடம் ஏற்படலாம்.மதியத்திற்கு மேல் திடீர் பயணம் செல்லக்கூடும். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள்.
கடகம்
கடக ராசி நேயர்களுக்கு இன்று வழக்கு விவகாரம் சாதகமாக அமையும். கூட்டுத் தொழில் தொடங்குவது பற்றி நண்பர்களுடன் ஆலோசனை செய்வீர்கள். எதிர்பார்த்த தகவல்கள் வந்து சேர்வதால் மகிழ்ச்சியான நாளாக அமையும்.
சிம்மம்
சிம்ம ராசி நேயர்களுக்கு இன்று நீங்கள் நினைத்ததை நிறைவேறும். திட்டமிட்டு செயல்படுவதால் எதிர்பார்த்த லாபம் வியாபாரத்தில் கிடைக்கும்.பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமை வெளிப்படும். செயல்களில் இருந்த இடையூறு விலகி தடைபட்ட காரியத்தை நிறைவேற்றுவீர்கள் .எண்ணம் நிறைவேற கூடிய நாள்.
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு இன்று மதியம் வரை நெருக்கடிகள் இருக்கும். அதன்பின் உங்கள் முயற்சிகள் வெற்றி அடையும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். நேற்று இருந்த நெருக்கடிகள் விலகி உங்கள் விருப்பம் நிறைவேற கூடிய நாள்.
துலாம்
துலாம் ராசி நேயர்களுக்கு இன்று எதிர்ப்பாராத ஒரு பிரச்சனை சந்திக்கப்படும் .உங்கள் முயற்சியில் முன்னேற்றம் அடைவீர்கள். உங்கள் செயல்களில் எதிர்பாராத தடை உண்டாகலாம். அலைச்சல் அதிகரிக்கும் செயல்களில் உண்டான சங்கடம் விலகி எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேற கூடிய நாள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களுக்கு இன்று குடும்பத்தில் மற்றவர்களால் ஏற்பட்ட குழப்பம் விலகி ,தம்பதிகளுள் ஒற்றுமை ஏற்படும் .நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்ப நலனில் அக்கறை அதிகரிக்கும் நாள்.
தனுசு
தனுசு ராசி நேயர்களுக்கு இன்று உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவுக்கு வரும்.வெளிவட்டார செல்வாக்கு உயரும் .ஆரோக்கியத்தில் கவனம் தேவை.இழுபறியாக இருந்த விவகாரம் ஒன்று சாதகமாக அமையும்.
மகரம்
மகர ராசியினர்களுக்கு இன்று சாதுரியமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்கள்.உங்களுக்கு எதிரானவர் மனம் திருந்துவார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவீர்கள். செயல்களில் ஏற்பட்ட தடைகள் சரி செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.
கும்பம்
கும்ப ராசி நேயர்களுக்கு இன்று போட்டியாளர்கள் மத்தியில் கடும் போட்டிகள் உருவாக்கப்படும். நீங்கள் எதிர்பார்த்த வரவு வந்து சேர்ந்தாலும் சில சங்கடங்கள் உண்டாகக்கூடும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும் .சட்டத்திற்கு புறம்பான விஷயங்களில் மனம் செல்லக்கூடும் ஆதலால் கவனம் தேவை.
மீனம்
மீன ராசி நேயர்களுக்கு இன்று பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும்.நீங்கள் எதிர்பார்த்தது நிறைவேறும்.இன்று கவனமாக செயல்படுவதால், தொழிலில் இருந்த தடை விலகி உங்கள் விருப்பம் நிறைவேற கூடிய நாள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |