காதல் திருமணத்தில் ஜாதக பொருத்தம் பார்ப்பது அவசியமா?
திருமணம் என்பது பிறப்பிலே எழுதப்பட்ட ஒன்று.இந்த நபர் இவரை தான் திருமணம் செய்யவேண்டும்.இவருக்கு திருமணம் யோகம் இந்த வயதில் என்று நம்முடைய வாழ்க்கை கணிப்புகளை நம்முடைய பிறப்பிலே கடவுள் எழுதிவிட்டார்.
நாம் அதை பற்றி தெரிந்து கொள்ளவதற்கு தான் ஜாதகம் எழுதுகின்றோம்.ஜாதகம் நம்முடைய வாழ்க்கையை பற்றி பல கோணத்தில் தெரிந்து கொள்ள உதவிகரமாக இருக்கிறது.
இந்துக்களில் பெரும்பாலான திருமணங்கள் ஜாதக பொருத்தம் பார்த்து அதன் அடிப்படையிலே நடைபெறுகிறது.அப்படியாக காதல் திருமணத்தில் ஜாதகம் பொருத்தம் பார்ப்பது இல்லை.
காதல் ஜாதகம் மதம் சாதி பார்த்து வருவதும் இல்லை.அப்படியாக ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்த காதல் தம்பதிகள் மற்றும் ஜாதகம் பார்க்காமல் திருமண செய்த யாராக இருந்தாலும் அவர்கள் திருமணம் முடிந்து செய்யவேண்டிய ஒரே விஷயம் திருப்பரங்குன்றம் முருகன் சந்நிதிக்கு தம்பதிகளாக சென்று, வணங்கி வந்தால், எவ்வித இடர்ப்பாடுகளும் இல்லாமல் வாழ்க்கையில் இனிதே இருக்கும்.
சிரமம் காரணமாக திருப்பரங்குன்றம் செல்ல முடியாதவர்களும், வெளிநாட்டில் வாழ்பவர்களும், மயில் இறகு நுனியைக் கத்தரித்து எடுத்து பூஜையறையில் வைத்து வணங்கிவர வேண்டும்.
தினசரி காலையில் பூஜை செய்யும்போது மயில் இறகினைக் கையில் வைத்துக்கொண்டு, ‘முருகப் பெருமானே, எங்களுக்கு நடந்து முடிந்த திருமணம்,எவ்வித இடையூறும் இல்லாமல் வாழ்க்கையை வென்றிட உனது அருள் வேண்டும்’ என்று சொல்லி வணங்கிடவேண்டும்.
காதல் திருமணம் செய்தவர்களும் வணங்கினால், குடும்பத்தில் குழப்பம் வராது.என்னதான் ஜாதக நம்பிக்கை இல்லை ஜாதகம் பார்க்காமல் திருமணம் செய்து இருந்தாலும் கால சூழ்நிலை கிரக நிலை மாற்றங்களால் தம்பதி இடையே சிறு சிறு பிரச்சனைகள் வர வாய்ப்புகள் இருக்கிறது.
ஆதலால் குழப்பம் இல்லாமல் வாழ இறை வழிபாடு மிக அவசியம்.இறைவனை வணங்குவோம் எந்த வித இடையூறுகள் வந்தாலும் அவன் சரி செய்து நம்முடைய வாழ்க்கையை செம்மையாக்குவான்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |