இந்த ஜாதக அமைப்பு கொண்டவர்கள் தான் வைத்து சட்டம் என்று பேசுவார்களாம்
ஜோதிட ரீதியாக நாம் கிரக அமைப்புகளை கொண்டும் கிரக நிலைகளின் அடிப்படையில் ஒருவரின் எதிர்கால வாழ்க்கை, நிகழ்கால வாழ்க்கை, கடந்த கால வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருக்கக்கூடிய ஒரு பாரம்பரிய நம்பிக்கையாகும்.
அந்த வகையில், அந்த கிரக நிலைகளை வைத்து ஒருவருடைய திருமண வாழ்க்கை, குண நலன்கள், பெற்றோர், உடன் பிறந்தவர்கள், வேலை வாய்ப்பு, வியாபாரம், பணவரவு போன்ற விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்.

அப்படியாக, ஒரு சில நபர்கள் நம்மை சுற்றி பார்த்து இருப்போம். எப்பொழுதும் அவர்கள் பேசுவதே சரி என்று பேசிக்கொண்டே இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் தான் சொல்வது தான் சட்டம் என்பது போல் அவர்களுடைய பேச்சு அமைந்திருக்கும்.
இதற்கு ஜாதகத்தில் கிரக அமைப்புகளை கொண்டு நாம் கணித்து தெரிந்து கொள்ள முடியும். அந்த வகையில் ஒருவருடைய ஜாதகத்தில் லக்னாதிபதி லக்னத்திலோ அல்லது பத்தாம் இடத்திலோ அமர்ந்திருந்தால் இவ்வாறான நபர்கள் எப்பொழுதும் தான் பேசுவதே சரி, என்று உறுதியாகவும் அதிகாரமாகவும் பேசக்கூடிய ஒரு பண்பை பெறுகிறார்கள்.
Disclaimer:
இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |