அடிக்கடி கண் துடிக்கிறதா? அப்போ இது கட்டாயம் நடக்குமாம்
ஜோதிடத்தை பொருத்தவரையில் நாம் செய்யும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் ஒவ்வொரு காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் ஒரு சிலருக்கு கண்கள் அடிக்கடி துடிக்கிறது என்றால் என்ன காரணம்? அதனால் அவர்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படுமா இல்லை பாதிப்பு உண்டாகுமா என்று பார்ப்போம்.
ஒருவருக்கு வலது கண் துடித்தால் அது எப்பொழுதும் நல்ல அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஆனால் இடது கண் துடித்தால் அவை அவ்வளவு நல்ல அறிகுறியாக காணப்படுவதில்லை. அறிவியல் ரீதியாக எடுத்துக் கொண்டால் கண் துடிப்பது ஒரு சில மன அழுத்தத்திற்கான காரணமாகவும் தூக்கமின்மை காரணமாகவும் சொல்லப்படுகிறது.
இருப்பினும் ஜோதிடத்தில் ஒரு பெண்ணிற்கு இடதுக்கண் அடிக்கடி துடிக்கிறது என்றால் வீடுகளில் மங்களகரமான விஷயங்கள் நடக்கும் இருப்பதை குறிப்பதாக நம்பப்படுகிறது. அதுவே ஆண்களுக்கு இடதுகண் அடிக்கடி துடிக்கிறது என்றால் அவர்கள் குடும்பத்தில் மங்களகரமான பேச்சுக்கள் நல்ல முறையில் முடிவடையும் என்று சொல்லப்படுகிறது.
அதைப்போல் வீடுகளில் அதிர்ஷ்டமும் எதிர்காலம் பற்றிய நல்ல வாய்ப்புகளும் இவர்களைத் தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. கண்களுக்கு மேல் இமைகள் துடிப்பது நம்முடைய வீட்டிற்கு விருந்தினர் வருகையை குறிப்பதாகும்.
கீழ் இமை துடித்தால் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வருவதை குறிப்பதாக சொல்லப்படுகிறது. தொடர்ந்து துடித்துக் கொண்டே இருந்தால் அவர்களுக்கு புதிய நண்பர்கள் புதிய ஆடைகள் போன்ற புதிய வரவுகள் தேடி வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
ஆனால் ஆண்களின் இடது கண் துடித்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனையை சந்திப்பதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







