இன்றைய ராசி பலன்(19-08-2025)
மேஷம்:
இன்று உங்களுடைய முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். தொழில் ரீதியாக பொருளாதாரத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
ரிஷபம்:
உங்கள் குடும்பத்துடன் குலதெய்வம் ஆலயம் சென்று வழிபாடு செய்வீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்கு விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
மிதுனம்:
உங்கள் வீடுகளில் சில பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களை பற்றி சில அவதூறுகளை பரப்பலாம். சில விஷயங்களை கண்டு கொள்ளாமல் இருப்பது நல்லது.
கடகம்:
உங்கள் மனதில் உள்ள ரகசியத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தொழில் வாழ்க்கையில் சில எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். கணவன் உங்களுக்கு துணையாக இருப்பார். நன்மையான நாள்.
சிம்மம்:
உங்கள் வீடுகளில் உள்ள பிரச்சனைகளை எளிதாக சமாளிப்பீர்கள். கணவன் மனைவி இடையே உள்ள கருத்துவேறுபாடுகள் விலகும். சிலர் திருவிழாக்களில் கலந்து கொள்வார்கள்.
கன்னி:
மாணவர்களுக்கு சில போட்டிகளில் கலந்து கொள்வார்கள். கல்லூரி வாழ்க்கை சிறப்பாக அமையும். உடன் பிறந்த சகோதரனால் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
துலாம்:
உங்கள் வீடுகளுக்கு இன்று விருந்தினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். இன்பம் காணும் நாள்.
விருச்சிகம்:
நண்பர்கள் உதவியால் உங்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். மாலை வரை இருக்கும் தெளிவு பின்னர் மாறுபடும்.
தனுசு:
உங்கள் வீடுகளில் ஏற்பட்ட மன கசப்புகள் விலகும். குடும்பத்துடன் சில சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக இருக்க வேண்டும். கவலைகள் விலகும் நாள்.
மகரம்:
உங்கள் முன்கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும். சகோதரி வழி உறவால் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு பொற்காலம். உங்கள் மீது உள்ள எதிர்ப்புகள் விலகும்.
கும்பம்:
மாலை வரை வேலைகளில் நிதானம் தேவை. அதன்பிறகு நினைப்பதை நிறைவேற்றிக் கொள்ள முடியும். எடுத்த வேலை சிறப்பாக முடியும். யோசித்து செயல்படுவது நல்லது.
மீனம்:
இன்று உங்கள் வீடுகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். சொந்தங்கள் உங்களுக்கு துணையாக இருப்பார்கள். வெளியூர் பயணத்தால் உங்களுக்கு லாபம் உண்டாகும். பண பிரச்சனை விலகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







