பாபா வாங்கா: 2025 டிசம்பர் மாதம் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க போகும் 4 ராசிகள்
2025 ஆம் ஆண்டு முடிவதற்கு இன்னும் சிறிது நாட்களே இருக்கின்ற வேளையில் மக்கள் அனைவரும் ஒரு புதிய தொடக்கத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அந்த வகையில் நம்முடைய வரலாற்றுகளில் பாபா வாங்கா கணிப்புகள் மிகவும் பிரபலமானவை.
அதாவது இவருடைய கணிப்புகள் அப்படியே நம்முடைய வாழ்க்கையில் நடப்பதை காணலாம். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு முடிவதற்குள் ஒரு குறிப்பிட்ட சில ராசிகள் அவர்களுடைய வாழ்க்கையில் நிச்சயம் எதிர்பாராத அளவில் ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை அனுபவித்ததோடு புதிய வருடத்தை தொடங்க காத்திருக்கிறார்களாம். அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம்.

ரிஷபம்:
2025 டிசம்பர் மாதம் ரிஷப ராசியினர் நிச்சயம் ஒரு நற்செய்தியை பெறுவார்கள். இவர்கள் நீண்ட நாட்களாக முடிக்க வேண்டும் என்ற ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடித்து நற்பெயர் பெற போகிறார்கள். அது மட்டுமல்லாமல் இவர்களுடைய குடும்பத்தில் இருக்கக்கூடிய மன அழுத்தங்கள் குறைந்து ஒரு மகிழ்ச்சியான சூழல் உண்டாகி ஒரு திடீர் திருப்பம் பெற போகிறார்களாம்.
மிதுனம்:
பாபா வாங்கா கணிப்பின்படி மிதுன ராசியினருக்கு அவர்களுடைய மரியாதை இந்த சமுதாயத்தில் உயரப் போகிறது. இவர்கள் பொருளாதார ரீதியாக ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தை தொட போகிறார்கள். நீண்ட நாட்களாக குடும்பத்துடன் தொலைதூர பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்திருப்பவர்களுக்கு நிச்சயம் அந்த பயணம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் காதல் திருமண வாழ்க்கையில் இருவருக்கும் இடையே அன்பு அதிகரிக்குமாம்.

சிம்மம்:
இவர்களுடைய கடந்த கால கவலைகள் அனைத்தும் ஒரு முற்றுப்புள்ளியை அடையப் போகிறது. இவர்கள் ஏதேனும் ஒரு இடத்தில் தேங்கி நின்று கொண்டிருந்தார்கள் என்றால் அதிலிருந்து மீண்டு வர போகிறார்கள். பொருளாதார ரீதியாக ஒரு மிகப்பெரிய உயரத்தை அடைந்து இவர்களுக்கான அங்கீகாரம் பெறுவார்களாம். அதுமட்டுமல்லாமல் திருமண வாழ்க்கை இவர்கள் நினைத்தபடி கைகூடி வர காத்திருக்கிறது.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு பாபா வாங்கா கணிப்பின்படி பல நாள் காத்திருந்த கனவுகள் எதிர்பாராத நேரத்தில் நிறைவேற போகிறது. இவர்களுடைய வாழ்க்கை மாறி ஒரு மிகப்பெரிய அளவில் இவர்கள் வசதி வாய்ப்புகளுடன் வாழ காத்திருக்கிறார்கள். காதல் மற்றும் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று கவலை கொள்பவர்களுக்கு நிச்சயம் ஒரு நல்ல வாழ்க்கை அமைய போகிறதாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |