இன்றைய ராசி பலன்(06-12-2025)
மேஷம்:
இன்று உங்களுக்கு வாழ்க்கை தொடர்பான ஒரு தெளிவு பிறக்கும். எதையும் தீர ஆலோசித்து உங்களின் முடிவுகளை எடுக்க வேண்டும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள்.
ரிஷபம்:
உங்கள் வீடுகளில் இன்று எதிர்ப்பாராத நற்செய்தி தேடி வரும். அத்தை வழி உறவால் நீங்கள் இன்று ஆதாயம் பெறுவீர்கள். வாழ்க்கை துணை உங்களை புரிந்து கொள்வார்கள். நன்மையான நாள்.
மிதுனம்:
வீடுகளில் சிலருக்கு தொழில் ரீதியாக சில முக்கிய முடிவுகள் எடுக்கும் நிலை வரலாம். முன்னோர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கும். குடும்பங்களின் குழப்பங்கள் விலகும் நாள்.
கடகம்:
இன்று ஒரு சிலருக்கு வாங்கிய கடனால் சில சங்கடமான நிலை வரலாம். வீட்டில் உள்ள பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் கவனமாக செயல்படவேண்டிய நாள்.
சிம்மம்:
குடும்ப உறுப்பினர்களின் உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சில முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம். வெளியூர் செல்லும் நிலை வரும்.
கன்னி:
தொழில் இடங்களில் நீங்கள் தேவை இல்லாத வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். தாய் உடல் நிலையில் முழுமையாக அக்கறை காட்ட வேண்டும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
துலாம்:
உங்கள் மனதில் தெளிவும் மகிழ்ச்சியும் பிறக்கும். சிலருக்கு மருத்துவ செலவுகள் சந்திக்க வேண்டிய நிலை வரலாம். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் உயரும்.
விருச்சிகம்:
உங்கள் வாழ்க்கை துணையிடம் நீங்கள் தேவை இல்லாமல் வாக்கு வாதம் செய்யாதீர்கள். உடன் இருப்பவர்களிடம் சற்று கவனமாக பேசுவது அவசியம். கோபத்தை குறைத்து கொள்ளுங்கள்.
தனுசு:
பிள்ளைகளால் மனதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடையும் நாள். மனதில் உள்ள கவலை விலகும் நாள். எதிர்காலத்தை தைரியாக சமாளித்து கொண்டு வாழலாம் என்ற மன தைரியம் பிறக்கும்.
மகரம்:
உடன் பிறந்தவர்களால் சில உண்மைகளை புரிந்து கொள்வீர்கள். உங்களை பற்றி நீங்கள் புரிந்து கொள்ளும் நாள். வேலை தொடர்பாக நீங்கள் முழு உழைப்பை போடுவீர்கள். நன்மையான நாள்.
கும்பம்:
குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். தொலை தூர பயணம் மேற்கொள்ளும் பொழுது நிதானம் தேவை. பதட்டமாக எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள்.
மீனம்:
இன்று இன்று மனதில் ஓரு நிம்மதி பார்ப்பீர்கள். வாழ்க்கை மீது ஒரு நல்ல பிடிப்பு உண்டாகும். பிள்ளைகள் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். வம்பு வழக்குகளில் இருந்த கவலை விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |