நீங்கள் பிறந்த எண் இதுவா? உங்கள் வாழ்க்கையை மாற்றும் சிவன் கோயில் இது தானாம்
நம்முடைய இந்து மதத்தில் சிவபெருமான் கர்ம வினைகளை அழித்து பாவங்களை போக்க கூடியவராக இருக்கிறார். அதேப்போல் ஒவ்வொரு சிவாலயங்களுக்கும் ஒவ்வொரு மகிமைகள் இருக்கிறது.
அப்படியாக, மனிதர்கள் அவர்கள் பிறந்த நேரம், தேதி, ராசி, நட்சத்திரம் இவைகளுக்கு ஏற்ப ஒரு சிவாலயங்களுக்கு செல்லும் பொழுது அவர்களுக்கு வாழ்க்கையில் பலவிதமான நல்ல மாற்றங்கள் உண்டாகுவதை நாம் பார்க்கலாம். அந்த வகையில் எந்த எண்ணில் பிறந்தவர்கள் எந்த சிவாலயம் சென்று வழிபாடு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் உண்டாகி ஏற்றம் பெறுவார்கள் என்பதை பற்றி பார்ப்போம்.

எண் 1, 10, 19, 28:
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக சூரியன் இருக்கிறார். ஆக இந்த எண்களில் பிறந்தவர்கள் கட்டாயம் ஒரு முறையாவது ராமேஸ்வரம் சென்று வழிபாடு செய்வது அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல திருப்பத்தை கொடுக்கும். இவர்கள் ஸ்ரீ ராமனையும் சிவபெருமானையும் கட்டாயம் வழிபாடு செய்தால் பிறவி பலனை அடைவார்கள்.
எண் 2, 11, 20, 29:
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக சந்திர பகவான் இருக்கிறார். ஆக இவர்கள் வாழ்க்கையில் ஒரு முறை அமர்நாத் ஆலயம் சென்று வழிபாடு செய்தால் நிச்சயம் அவர்களுடைய ஆற்றலில் ஒரு நல்ல மாறுதல்களை சந்திக்கலாம். அதாவது இந்த கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து வர அவர்கள் நீண்ட நாள் மன குழப்பம் நீங்கி நல்ல மாற்றம் கிடைக்கும்.
எண் 3, 12, 21, 30:
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக குரு பகவான் இருக்கிறார். ஆக இவர்கள் சிதம்பரத்தில் இருக்கக்கூடிய நடராஜரை வழிபாடு செய்தால் இவர்களுக்கு ஆன்மீக ரீதியாக ஒரு நல்ல முன்னேற்றமும் அவர்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல ஏற்றமும் கிடைக்கும்.
எண் 4, 13, 22, 31:
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக ராகு பகவான் இருக்கிறார். இவர்கள் ரிஷிகேஷ் நீலகண்ட மகாதேவ் கோயில் சென்று வழிபாடு செய்தால் அவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகள் மற்றும் மனரீதியாக இருக்கக்கூடிய தடுமாற்றங்கள் இவை அனைத்தும் விலகி வாழ்க்கையில் ஒரு நல்ல தெளிவு உண்டாகும்.

எண் 5, 14, 23:
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக புதன் பகவான் இருக்கிறார். இவர்கள் அவர்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டமும் மாற்றமும் உண்டாக நிச்சயம் ஒருமுறை புவனேஸ்வரில் அமைந்திருக்கக் கூடிய லிங்கராஜர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நிச்சயம் ஒரு நல்ல தெளிவு உண்டாகும்.
எண் 6, 15, 24:
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக சுக்கிர பகவான் இருக்கிறார். இவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் உறவுகளால் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது என்றால் ஒரு முறை திருவண்ணாமலையில் இருக்கக்கூடிய அண்ணாமலையாரை தரிசனம் செய்ய அவர்கள் வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் விலகி ஒரு நல்ல மாற்றம் பிறக்கும்.
எண் 7, 16, 25:
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக கேது பகவான் இருக்கிறார். இவர்களுக்கு மனரீதியாக ஏதேனும் குழப்பங்கள் விரக்தி இருந்து கொண்டே இருக்கும். ஆதலால் இவர்கள் நிச்சயம் அவர்கள் வாழ்க்கையில் முடிந்த வரை நேபாளில் அமைந்திருக்கக் கூடிய பசுபதிநாத் ஆலயம் சென்று வழிபாடு செய்ய அவர்களுக்கான ஒரு நல்ல மாற்றத்தை பெறுவார்கள்.
எண் 8, 17, 26:
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக சனி பகவான் இருக்கிறார். வாழ்க்கையில் தாங்கள் எந்த வேலைகளை செய்தாலும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை மேலும் இதை எடுத்தாலும் ஒரு கடினமான காலமாகவே இருக்கிறது என்று மனம் வருந்துபவர்கள் நிச்சயம் ஒரு முறை உத்தரகாண்டில் அமைந்திருக்க கூடிய நீலேஸ்வர் மகாதேவ் ஆலயம் சென்று வழிபாடு செய்தால் நல்ல மாற்றம் உண்டாகும்.
எண் 9, 18, 27:
இந்த எண்களை ஆளக்கூடிய கிரகமாக செவ்வாய் பகவான் இருக்கிறார். ஆக எதிரிகள் தொல்லை அல்லது எந்த காரியத்தை எடுத்தாலும் தடைகள் தடங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால் நிச்சயம் இவர்கள் ஒரு முறை உஜ்ஜயினியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மகாகாலேஸ்வரர் கோயில் சென்று வழிபாடு செய்ய அவர்களுக்கு ஒரு நிதானம் கிடைத்து வாழ்க்கையில் உள்ள குறைகள் தடைகள் எல்லாம் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |