பகவத் கீதை: வெளிப்படையாக எதிர்த்துப் போராடுபவனை நம்பு-ஆனால் இவர்களை மட்டும் நம்பாதே
இந்த உலகத்தில் வெளிச்சம் என்று ஒன்று இருந்தால் கட்டாயம் இருட்டு என்று ஒன்று இருக்கும். நன்மை தீமை என்று ஒன்றுக்கு எதிராக மற்றொன்று உள்ளது. அப்படியாக, மனிதர்களும் பல்வேறு வகைகள் இருக்கிறார்கள். நம்மிடம் பழகும் அனைவரும் நமக்கு நன்மை செய்வார்கள் என்று சொல்லிவிடமுடியாது.
யார் மனதில் எவ்வளவு விஷம் இருக்கிறது என்று காலமே நமக்கு உணர்த்த வேண்டும். அந்த வகையில் கீதையில் நாம் யாரை நம்ப வேண்டும்? யாரை நம்ப கூடாது என்று எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது. அதைப் பற்றி பார்ப்போம்.
பகவத் கீதையில் நம்மிடம் நேருக்கு நேர் சண்டையிடம் எதிரியை கூட நம்பி விடலாம். ஆனால் கூடவே இருந்து அன்பு வார்த்தைகள் பேசி சமயம் பார்த்து கால் வாரி விடும் சில நண்பர்களிடம் மட்டும் கவனமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.
உலகம் போற்றும் மஹாபாரதத்தில் பாண்டவர்களை வீழ்த்த எதிரிகள் நேருக்கு நேர் போர் அறிவித்தனர். அதில் துரியோதனன் எப்பொழுதும் அர்ஜுனனின் நல்ல நண்பனாக இருக்க முயற்சி செய்யவே இல்லை.
துரியோதனன் அர்ஜுனனுக்கு நான் உன் எதிரியே என்று தீர்க்கமாக காண்பித்ததால் தான் அர்ஜுனன் மன வலிமையோடும் உறுதியோடும் போருக்கு தன்னை தயார் செய்துகொண்டான். ஆனால், கர்ணனை எடுத்துக்கொண்டால் அவனுக்கு எதிரிகள் வெளியே இல்லை.
அவன் உடனே போலி முகத்துடன் ஆசை வார்த்தைகள் பேசிக்கொண்டு இருந்தார்கள். அதாவது ஒரு போலி நண்பன் எவ்வளவு பொன் சிரிப்புடன் நம்முடன் பேசி பழக்கமுடியுமோ அவ்வளவு அழகாக பேசி அவன் விஷ தன்மையை மறைத்து, அவன் சூழ்ச்சிகளால் நம் ஆன்மாவை பலவீனப்படுத்துகின்றான்.
ஆனால், ஒரு வெளிப்படையான மோதல், போராட நமக்கு மிக பெரிய தைரியத்தைக் கொடுக்கிறது. ஆனால், மறைமுகமான துரோகம் நம் மனதின் அமைதியைக் கெடுக்கிறது. ஆக, நாம் எந்த ஒரு பிணைப்பும் இல்லாமல் பழகும் பொழுது சில வரைமுறைகள் வைக்கின்றோம்.
அவர்களும் நாமும் நமக்கான எல்லைகள் தாண்டி செல்லாதவாறு பார்த்து கொள்கின்றோம். அதுவே, நாம் ஒருவரை மிகவும் நம்பி வரையறை இல்லாமல் பழகும் பொழுது கட்டாயம் அங்கு நமக்கு ஏதோ ஒரு வித பாதிப்புகள் நடக்கிறது.
ஆக, யாராக இருப்பினும், நமக்கு எவ்வளவு சூழ்ச்சிகள் செய்து துரோகம் செய்ய நினைத்தாலும், நாம் தர்மத்தை கடைப்பிடித்து வாழ அந்த தர்மம் ஆனது இறுதியில் நம்மை வந்து காப்பாற்றும் என்கிறது கீதை.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |