ஜுலையில் வெற்றியைக் குவிக்கும் ராசிகள் யார்? இந்த 3 ராசியில் நீங்க இருக்கீங்களா?
ஜுலை மாதம் சனி வக்ர பெயர்ச்சியும், குரு உதயமும் நடக்கவுள்ள நிலையில், எந்தெந்த ராசியினருக்கு பொற்காலம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கிரகங்களின் மாற்றம்
சுப கிரகமான குரு பகவான் ஜுலை 9ம் தேதி உதயமாகளுள்ள நிலையில், தற்போது மிதுன ராசியில் அஸ்தமன நிலையில் உள்ளார்.
இதே போன்று நீதியின் கடவுளான சனி பகவான் ஜுலை 13ம் தேதி வக்ர பெயர்ச்சி அடையவுள்ளார். மார்ச் மாதம் 29ம் தேதி மீன ராசியில் பெயர்ச்சி அடைகின்றார். இந்த சனி பெயர்ச்சியும் இந்த ஆண்டின் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.
இம்மாதத்தில் சனி வக்ர பெயர்ச்சி மற்றும் குரு உதயத்தின் தாக்கம் அனைத்து ராசியிலும் இருக்கும் நிலையில், நன்மையினைப் பெறும் ராசியினைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
ரிஷபம்
குரு பெயர்ச்சிக்கு பின்பு வரும் குரு உதயம், சனி பெயர்ச்சிக்கு பின்பு வரும் சனி வக்ர பெயர்ச்சியானது ரிஷப ராசியினருக்கு வருமானத்தினை அதிகரிக்கின்றது.
முதலீடு செய்வதற்கு நல்ல நேரமாக இருப்பதுடன், பழைய முதலீட்டிலிருந்து திடீர் பண ஆதாயங்களைப் பெறுவீர்கள். வேலை தொடர்பாக நீண்ட பயணங்களை மேற்கொள்ள நேரிடுவதுடன், அனுகூலமான நன்மைகள் கிடைக்கும்.
மிதுனம்
இந்த மாற்றத்தினால் திருமண யோகம் கிடைப்பதுடன், வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பதுடன், பணி செய்யும் இடத்தில் ஊதிய உயர்வு, பதவி உயர்வும் கிடைக்கும்.
கடகம்
கடக ராசியினருக்கு இது சாதகமாக இருப்பதுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். தொழிலில் அதிக முன்னேற்றம் அடையலாம்.
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் நபர்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். பணியிடத்தில் உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளன.
மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், திருமண பாக்கியம், குழந்தை செல்வம் கிட்டவும், வாழ்வில் செல்வச் செழிப்பு அதிகரிக்கவும் குரு பகவானை வணங்கி தினமும், '‘குரவே சர்வ லோகானாம், பிஷஜே பல ரோகிணாம்; நிதயே சர்வ வித்யானாம், ஸ்ரீ தட்சிணாமூர்த்தயே நமஹ" என்ற ஸ்லோகத்தை பாராயணம் செய்வது நல்லது.
சனி பகவானின் அருள் பெற, 'நீலாஞ்ஜன ஸமாபாஸம், ரவிபுத்ரம் யமாக்ரஜம்; ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம், தம் நமாமி சனைச்சரம்' என்ற ஸ்லோகத்தை தினமும் பாராயணம் செய்யலாம். இது தவிர சனி தோஷம், ஏழரை சனி ஆகிய பாதிப்புகளில் சிக்கியுள்ளவர்கள் திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலுக்கு சென்று அவரை வழிபடலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |