மனிதர்கள் உதறி சென்றாலும் கருப்பா என்றால் கூப்பிட குரலுக்கு ஓடி வரும் காவல் தெய்வம்
இந்த உலகத்தில் மனிதர்களுடைய மனநிலை கால நிலைக்கு ஏற்ப மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால், தெய்வங்கள் எப்பொழுதும் மனிதர்களைப் போல் மாறுவதில்லை, நம்பியவர்களை ஒருபோதும் அவர் எந்த நிலையிலும் கைவிடுவதில்லை.
உண்மையாக மனமுருகி என்றோ வைத்த பிரார்த்தனைக்கும் தெய்வம் காலம் காலமாக நின்று பதில் சொல்லிக் கொண்டிருக்கும். அப்படி, ஒரு முறை கூப்பிட்டாலே காலம் முழுவதும் நமக்கு காவலாக நிற்கக்கூடிய காவல் தெய்வமாக விளங்க கூடியவர் தான் கருப்பண்ண சுவாமி.
பல ஊர்களில் பல குடும்பங்களில் உடைய குலதெய்வமாக இருக்கக்கூடிய இந்த கருப்பண்ண சுவாமியை மனதார நினைத்தாலே போதும், இருந்த இடத்தில் அவர் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவக் கூடியவராக இருப்பார், இன்றைய காலகட்டங்களில் பலரும் நெருங்கியவர்களால் துரோகம், சூழ்ச்சி பொறாமை போன்ற மனிதர்களுடைய தீய எண்ணங்களால் நாம் ஒவ்வொரு நாளும் தாக்கப்பட்டிருக்கின்றோம்.

அந்த நேரங்களில், நம்முடைய ஜாதகத்திலும் சரியான கிரக நிலைகள் இல்லாவிட்டால் அந்த தாக்கம் நம்மை மிகப்பெரிய அளவில் பாதித்துவிடும். அதிலிருந்து விடுபட வேண்டும் என்றால் கருப்பனின் திருப்பாதங்களை பற்றி கொள்வதை தவிர்த்து நமக்கு வேறு உச்ச பரிகாரம் எதுவுமே இல்லை. அந்த வகையில். கருப்பண்ண சுவாமி வழிபாட்டின் சிறப்புகளைப் பற்றி பார்ப்போம்.
ஒருமுறை இந்த கருப்பண்ண சுவாமியிடம் முறையிட்டு நீதான் என்னுடைய பாதுகாப்பு என்று சொல்லிப் பாருங்கள். காலம் முழுவதும் நீங்கள் அவரை மறந்தாலும் அவர் உங்களுக்கு பாதுகாப்பாக உங்களுடன் எப்பொழுதும் பயணிப்பார். இதுதான் அவருடைய தனித்துவ ஆற்றல்.
எப்பொழுதும் கருப்பன் தன்னை நம்பியவரை அவர் கைவிடுவதே இல்லை. அதேபோல் அவர் பக்தர்களுக்கு துரோகம் செய்தவர்களை அவர் தட்டிக் கேட்காமல் விட்டதும் இல்லை.
அந்த வகையில், பல குடும்பங்களில் காவல் தெய்வமாக இருக்கக் கூடிய கருப்பண்ண சுவாமி வழிபாட்டை வீடுகளில் குழந்தைகளுக்கு சிறுவயதில் இருந்தே அந்த தெய்வத்தின் தன்மைகளையும் குலதெய்வம் ஏன் இவ்வளவு முக்கியம் என்ற ஒரு வழிகாட்டுதலையும் நாம் எப்போதும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

காரணம், கஷ்ட காலங்களில் வீடுகளில் அமர்ந்து புலம்புவதை காட்டிலும் தெய்வத்திடம் சரண் அடைய வேண்டும் என்று கற்றுக் கொடுக்கும் பொழுது அந்த வழிபாடு அவர்களுக்கு வழி துணையாக அமைந்து விடுகிறது. பிற்காலங்களிலும் அவர்கள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பிறகு அந்த தெய்வத்தினுடைய பலத்தால் மனிதர்கள் நம்மை விட்டு சென்றாலும் அந்த இறை துணையால் அவர்கள் மீண்டும் எழுந்து போராடக் கூடிய தன்மையைப் பெறுகிறார்கள்.
மேலும், கருப்பண்ணசாமி வழிபாடு செய்வது மிகவும் எளிது அவர் பெரிதாக உங்களிடம் பொருள் கேட்கவில்லை. அவள் கேட்பது உண்மையான நியாயமான அன்பும் பக்தியை மட்டும் தான். நீங்கள் அவர் ஆலயத்திற்கு செல்லும் பொழுது வெற்றிலை பாக்கும் பழமும் மட்டும் வாங்கிக் கொண்டு சென்றால் போதும் அவர் மனம் நிறைந்து விடுவார்.
கருப்பண்ண சுவாமியை பொறுத்தவரை தர்மமும் நியாயமும் மட்டுமே அவர் அருகில் நம்மை அழைத்துச் செல்லும். நீங்கள் எவ்வளவு துரோகம் செய்தும் அவருடைய சொந்த குடும்பமாகவே இருந்தாலும் அவர் அருகில் நீங்கள் நெருங்க முடியாது. நீங்கள் எவ்வளவு சத்தமிட்டு அழுதாலும் அவர் உங்கள் அருகில் வரமாட்டார்.
இதுதான் இந்த கருப்பண்ண சுவாமி. பாசத்திற்கு பாசமும், வேசத்திற்கும் விவேகத்தோடும் பதில் கொடுப்பவர். ஆக, நிச்சியம் உங்களுடைய குல தெய்வமும் கருப்பண்ண சுவாமியாக என்றால் கட்டாயம் ஒவ்வொரு கோவில் திருவிழாவிற்கும் குழந்தைகளுடன் நீங்கள் சென்று வழிபாடு செய்து வாருங்கள்.

அதிலும், கோவில்களில் நடக்கக்கூடிய கும்பாபிஷேகங்களில் கலந்து கொள்வது மிகப்பெரிய விசேஷம். ஜாதகத்தில் எவ்வளவு பெரிய குறைகள் இருந்தாலும் சரி உங்களுக்கு எவ்வளவு பெரிய கஷ்ட காலங்கள் இருந்தாலும் சரி உங்களை சூழ்ந்து இருக்கக்கூடிய பில்லி, சூனியம் எதுவாக இருந்தாலும் சரி கருப்பண்ண சுவாமி கோயில் நடந்த கும்பாபிஷேகத்தில் நீங்கள் கலந்து கொள்ளும் பொழுது உங்கள் அந்த சுவாமியின் ஆற்றல் வெளிப்பாடு நமக்கு மிகப்பெரிய அளவில் ஆசிர்வாதத்தையும் நன்மையையும் வாழ்க்கையில் உயரத்தையும் கொடுக்கும்.
நீங்கள் அந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டு வழிபாடு செய்த பிறகு உங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மிகப்பெரிய மாற்றங்களை பார்க்கலாம்.
ஆக, மனிதர்கள் கைவிட்டார்கள் என்று வருந்தாதீர்கள். கருப்பண்ண சுவாமியை பற்றி கொள்ளுங்கள். உங்கள் கண்களில் ஒரு துளி கண்ணீர் வர விரும்ப மாட்டார். கண்ணீர் வருவதற்கு காரணமான அமைந்தவர்களையும் அவர் விட்டு வைக்க மாட்டார்.

மேலும், பணம் வாங்கிகொண்டு தர மறுப்பவர்களுக்கும், நம்பி ஏமாற்றியவர்களுக்கும், ஒருவர் குடும்பத்தை நாசம் செய்பவர்களுக்கும் இவ்வாறான ஒரு அரக்க குணம் படைத்த மனிதர்களிடையே நாம் வாழும் பொழுது மனம் பல விதத்தில் துன்பம் அடையும். அப்பொழுது, நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம். நேரடியாக கருப்பண்ண சுவாமி ஆலயம் செல்லுங்கள். அவர் பாதத்தில் என் வலியை உன்னிடம் சமர்ப்பிக்கிறேன். நியாயம் கேட்பது உன்னுடைய வேலை என்று அவரிடம் ஒப்படைத்து விடுங்கள்.
பணமும் பலமும் இல்லாத உள்ளங்களுக்கு கருப்பன் கோயிலே நீதிமன்றம். இன்னும் சொல்ல போனால் நீதிமன்றம் சென்று தோற்ற வழக்கு உண்டு. ஆனால், கருப்பன் கிட்ட முறையிட்ட வழக்குக்கு நியாமான தீர்ப்பு வராமல் போனது இல்லை.
வீழ்த்தியவர்களையும் சூழ்ச்சி செய்தவர்களையும் உங்கள் காலடியில் வந்து விழப்வைப்பார். இதுதான் கருப்பண்ண சுவாமி அருள். எங்கும் நிறைந்து இருக்கட்டும் கருப்பனின் அருளும் ஆசீர்வாதமும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |