தினமும் 5 நிமிடம் இதை செய்தால் வாழ்க்கையே மாறுமாம்.. என்ன தெரியுமா?

By Sakthi Raj Mar 09, 2026 11:30 AM GMT
Report

ஒவ்வொரு மனிதனுக்கும் அமைதி என்பது அவசியமாக இருக்கிறது. அமைதி இருந்தால் தான் அவன் தன்னை அறிய முடியும். தன் நிலை அறிந்தால் தான் தெளிவாக செயல்பட முடியும். ஆனால் பலரும் தங்கள் வாழ்க்கையில் மன அமைதி பெறுவதற்கு இடம் கொடுப்பதே இல்லை. அதனால் தான் பெரியவர்கள், சாதுக்கள், முனிவர்கள் எல்லோரும் தியானம் செய்து பழக வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

ஒரு மனிதன் தியானம் செய்யும் பொழுது அவன் அமைதி நிலையை அடைகிறான். அவன் ஆன்மா சாந்தமடைகிறது. செய்கின்ற காரியங்களில் சிதறல்கள் ஏற்படாமல் இருக்கிறது. அப்படியாக ஒருவர் தினமும் ஐந்து நிமிடம் ஆவது தியானம் செய்தால் அவர்கள் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை பற்றி பார்ப்போம்.

தினமும் 5 நிமிடம் இதை செய்தால் வாழ்க்கையே மாறுமாம்.. என்ன தெரியுமா? | Benefits Of Doing Meditation Daily 5 Minutes

கட்டாயமாக ஒருவருடைய வாழ்க்கையில் அவர்கள் அமைதி நிலையை பெறவும் இறைவனை நெருங்கி செல்லவும் தினமும் ஐந்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டு.ம் இந்த ஐந்து நிமிடம் தனக்காக நேரம் ஒதுக்கும் பொழுது அவர்கள் மனதில் இருக்கக்கூடிய கோபம் பொறாமை, வஞ்சகம், அறியாமை இவை எல்லாம் நீங்குகிறது.

நம் மனமானது சிந்தனை ஓட்டங்களில் இருந்து ஓய்வு பெறுகிறது. உண்மையில் தியானம் என்பது ஓய்வின்றி கிடக்கும் நம் சிந்தனைகளை ஒருநிலை அடையச் செய்வதே ஆகும். எப்பொழுது நாம் சிந்தனைகளுக்கு ஓய்வு கொடுக்கின்றோமோ அப்பொழுது அந்த சிந்தனையானது வலுப்பெறுகிறது.

தினமும் 5 நிமிடம் இதை செய்தால் வாழ்க்கையே மாறுமாம்.. என்ன தெரியுமா? | Benefits Of Doing Meditation Daily 5 Minutes

எப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று தெளிவு பெறுகிறது. அதைவிட முக்கியமாக நம்முடைய மனச்சோர்வு விலகுகிறது. நாம் இறைவனை நெருங்குவதற்கு மிக எளிதாகவும் இருக்கிறது.

ஆக தினமும் ஒரு ஐந்து நிமிடம் எதைப் பற்றியும் யோசிக்காமல் நமக்காக தியானம் செய்து வரும் பொழுது நிச்சயம் மனதில் அமைதி பிறப்பதை பார்க்கலாம். நீங்கள் அதை தொடர்ந்து செய்து வரும் பொழுது நீங்கள் புதிய மனிதராக மாறுவதையும் நீங்கள் உணரலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US