ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு விரதம் இருந்தால் நினைத்த காரியங்களை சாதிக்கலாம்

By Sakthi Raj Aug 15, 2026 12:05 PM GMT
Report

பொதுவாகவே, ஞாயிற்றுக்கிழமை சூரியபகவான் வழிபாட்டிற்கு உரிய தினமாகும். அந்த வகையில், ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து சூரிய பகவானை வழிபாடு செய்கின்ற பொழுது நமக்கு எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களை நாம் வீழ்த்த கூடிய ஆற்றலை சூரிய பகவான் கொடுக்கிறார்.

சூரியன் தான் மிகப்பெரிய நட்சத்திரம். இந்த பிரபஞ்சத்திற்கே அவர்தான் ஒளி ஆற்றலை தரக்கூடியவர். இவரை வழிபடுவதற்கு நிச்சயம் வாழ்க்கையில் மேன்மேலும் வளரக்கூடிய ஆற்றலை கொடுக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு விரதம் இருந்தால் நினைத்த காரியங்களை சாதிக்கலாம் | Benefits Of Fasting For Suriya Bagavan On Sunday

பெண்கள் வீடுகளில் அவசியம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக குறிப்புகள் என்ன?

பெண்கள் வீடுகளில் அவசியம் பின்பற்ற வேண்டிய ஆன்மீக குறிப்புகள் என்ன?

விரதம் இருக்கும் முறை:

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு விரதம் இருப்பவர்கள் காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து பிரம்ம முகூர்த்த நீராட வேண்டும். பிறகு பூஜை செய்யும் இடத்தில் நன்கு சுத்தம் செய்து அர்ச்சனைக்கு ஒரு தட்டு தயார் செய்து கொள்ள வேண்டும்.

அதில் கொஞ்சம் அரிசி, குங்குமம், சிவப்பு நிற மலர்கள் ஏதேனும் ஒரு பழம் ஆகியவற்ற வைத்துக் கொள்ளலாம். விளக்கை ஏற்றுக் கொண்டு அதை சூரியன் உதிக்கும் திசை நோக்கி வைத்து ஒரு சிறிய சொம்பில் வைத்திருக்கும் தண்ணீரை எடுத்து சூரிய பகவானை நோக்கி வழிபாடு செய்து கொண்டே அந்த அர்ச்சனை தட்டி மீது தீர்த்தம் போல் தெளிக்க வேண்டும்.

பிறகு, பூஜை முடித்து சாப்பிடுவதற்கு ஏதாவது இனிப்பு வகைகள் இருக்க வேண்டும். குறிப்பாக வெள்ளம் சேர்த்து செய்யப்பட்ட இனிப்பு வகைகளை சாப்பிடலாம். அதன் பின் மாலை வரை தண்ணீர் பால் மட்டும் எடுத்து விரதம் இருக்கலாம். பிறகு மாலையில் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு விரதம் இருந்தால் நினைத்த காரியங்களை சாதிக்கலாம் | Benefits Of Fasting For Suriya Bagavan On Sunday

2026: ஆவணி மாதம் தவறவிடக்கூடாத சிறப்பு விசேஷங்கள் மற்றும் முக்கிய விரத நாட்கள்

2026: ஆவணி மாதம் தவறவிடக்கூடாத சிறப்பு விசேஷங்கள் மற்றும் முக்கிய விரத நாட்கள்

பலன்கள்:

இவ்வாறு சூரிய பகவானுக்கு விரதம் மேற்கொள்கின்ற பொழுது நம்முடைய உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட ஆயுள் கிடைக்கும். கொடிய நோய்களிலிருந்து விடுதலை பெறலாம். முகத்தில் ஒரு வசீகரத் தோற்றம் உண்டாகும்.

சமுதாயத்தில் பிறர் மதிக்கக் கூடிய சூழ்நிலை பெறலாம். பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகும். செய்வினை மாந்திரீகம் போன்ற விஷயங்களில் இருந்து விடுதலை பெறலாம். எதிரிகளிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். அரசாங்க பதவியில் உயர்ந்த நிலைக்கு செல்லலாம். 

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US