முருகனுக்கு செவ்வாய் கிழமை விரதத்தின் நன்மைகள்
தமிழ் கடவுகளாக போற்றப்படும் முருகப்பெருமான் செவ்வாய்க்குரியவர்.
இவரை வணங்கி தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அந்தவகையில், முருகனுக்கு செவ்வாய் கிழமையில் விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
செவ்வாய்க்கிழமை தோறும் அதிகாலையில் எழுந்து நீராடி நித்தியக் கடன்களை முடித்து, அருகில் உள்ள முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று வழிபடவேண்டும்.
பின்னர் வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு மட்டும் அருந்தி, விரதத்தை கடைபிடிக்க வேண்டும்.
கந்த சஷ்டிக் கவசம், கந்த குரு கவசம் போன்ற முருகப் பெருமானுக்கு உரிய ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்யலாம்.
மாலை 6 மணிக்கு மறுபடியும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
இந்த விரத்தை 9 செவ்வாய்க்கிழமைகளில் கடைபிடித்தால் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும்.
மேலும், தொடர்ந்து 9 செவ்வாய்க்கிழமை முருகனை பயபக்தியோடு மனதில் நினைத்து விரதம் இருந்து வர கடன் நீங்கி செல்வம் பெருகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |