ஜோதிடம்: வீட்டில் நாய் வளர்ப்பவர்களா? இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்
மனிதனுக்கு விலங்குகள் ஒரு வகையான ஆறுதலும் துணையும் என்றே சொல்லலாம். அப்படியாக, காலம் காலமாக வீடுகளில் நாய் வளர்க்கும் பழக்கம் கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் வீடுகளில் நாய் வளர்ப்பது என்பது ஜோதிடத்தில் மனிதர்களுக்கு பல வகையான மாற்றத்தை கொடுக்கிறது என்று சொல்ல படுகிறது. அதை பற்றி பார்ப்போம்.
நம் வீடுகளில் நாய் வளர்ப்பது என்பது நம்முடைய வாழ்க்கைக்கு நல்ல அனுபவமாக இருக்கும் என்கிறார்கள். அதோடு நட்பு விலங்குகளாக கருதப்படும் நாய் நம்முடைய உடலின் சக்கரங்களையும், ஆற்றல்களையும் சமநிலைப்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.
ஒருவர் வீட்டில் நாய் வளர்ப்பதின் மூலம் அவர்கள் வீட்டில் உள்ள வெறுமை விலகுகிறது. எவ்வளவு பதட்டமான சூழல் இருந்தாலும் வீட்டில் நாய் வளர்க்கும் பொழுது நம் மனம் அமைதி அடைகிறது என்று சொல்லப்படுகிறது.
மேலும், ஒருவர் உடலில் சக்கரங்கள் இயங்குவதில் தடைகள் ஏற்பட்டால் அவை நமக்கு எதிர்மறை விளைவுகளையும் உடலில் சோர்வையும் உண்டாக்கும்.
காரணம், நம் உடலில் ஏழு முக்கிய சக்கரங்கள் உள்ளன. ஒவ்வொரு சக்கரங்களும் முதுகெலும்பின் அடிப்பகுதியிலிருந்து தலையின் கிரீடம் வரை ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டைச் செய்கின்றன.
நாம் வளர்க்கும் நாய்கள் இந்த ஏழு சக்கரத்தை சமநிலை செய்கிறது. மேலும், நாய்களுடைய விசுவாசம் மற்றும் நிபந்தனையற்ற அன்பு மூலம் நம்மைப் பாதுகாப்பாக உணர வைக்கின்றன.
அதோடு, நாய்களுடன் விளையாடும் பொழுது நமக்கு மன அமைதியை அளிக்கிறது. பொதுவாக நாய்கள் நிகழ் காலத்துடன் வாழும் தன்மை கொண்டவை. மிக முக்கியமாக நாய்கள் உள்ளுணர்வு கொண்ட விலங்குகள்.
அவை நம்முடன் இருக்கும் பொழுது நமது சொந்த உள்ளுணர்வை மேம்படுத்தி, நமது உள் ஞானத்தை அடைய உதவுகிறது. நாய்கள் நம்முடைய வாழ்க்கையை நேர்மறையாக மாற்றுகிறது. நாய்கள் நம் வாழ்க்கையின் மேல் ஒரு பிடிப்பையும், நம் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகிறது என்று ஜோதிடத்தில் சொல்லப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |