லட்சுமி குபேர பூஜை செய்தால் உடனடி கோடிஸ்வர யோகம் கிடைக்குமா ?

By Sakthi Raj Aug 06, 2026 12:12 PM GMT
Report

 ஜோதிடத்தில் நிழல் கிரகங்கள் என்று சொல்லக்கூடிய ராகு பகவான் நம்முடைய ஜாதகத்தில் 3, 6, 10, 11 ஆகிய இடங்களில் அமர்ந்து அதனுடைய திசை நடக்கும் பொழுது எதிர்பாராத செல்வ வளம் நமக்கு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

மேலும், 6, 8, 12 ஆகிய இடங்களில் அதிபதிகள் பரிவர்த்தனை பெறுவது நமக்கு பணவரவை உண்டு செய்வதாக சொல்லப்படுகிறது. அதோடு, ஒரு சில கிரக மாற்றங்களில் பொழுது நாம் பணத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

அதாவது குரு பகவான் வக்ர நிலை இருக்கும் பொழுது நிதி முதலீடுகளில் நாம் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஜாதகத்தில் இரண்டாம் வீட்டில் பாவ கிரகங்கள் இருந்தால் முதலீடு செய்யும் பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

தீராத பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் வெற்றிலை தீப ரகசியம்

தீராத பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கும் வெற்றிலை தீப ரகசியம்

இல்லை என்றால் பொருளாதார இழப்பு நேரிடும். அதேபோல், சுக்கிரன் சனி இணைவு "மகாலட்சுமி யோகம்" என்று அழைக்கப்படுகிறது. இது தொழிலில் நிலையான லாபத்தை நமக்கு பெற்றுக் கொடுக்கும்.

மேலும், உங்களுக்கு பண வரவை பெற்றுக் கொடுக்க தினமும் 10 நிமிடங்கள் குபேர முத்திரை 5 விரல்களையும் சேர்த்து வைத்தல் போன்ற பயிற்சி செய்வது கவனத்தை ஒருமுகப்படுத்தி பணவரவை அதிகரிக்க உதவும் என்று சொல்கிறார்கள்.

அதோடு, ஜோதிடம் ரீதியாக பொருளாதாரம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை இந்த காணொளியை பார்த்து தெரிந்துக் கொள்வோம். 


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US