துன்பம் தீர ஆடி மாதத்தில் அம்மனுக்கு எந்த நிற புடவை சாற்றினால் என்ன பலன் கிடைக்கும்
ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிக உகந்த மாதமாக இருக்கிறது. ஒவ்வொரு அம்மனின் ஆலயங்களிலும் இந்த ஆடி மாதம் மிகவும் விசேஷமான பூஜைகளும் திருவிழாக்களும் நடைபெறும். அப்படியாக, ஆடி மாதம் அம்மனுக்கு எந்த நிற புடவை சாற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
1. ஆடி மாதத்தில் அம்மனுக்கு சிவப்பு நிற புடவை சாற்றினால் இவர்களுக்கு தைரியம் மற்றும் வெற்றி வந்து சேரும். மேலும் இவர்களுக்கு எதிரியை வெல்லக்கூடிய மன வலிமை கிடைக்கும்.
2. மஞ்சள் நிற புடவையை சாற்றி வழிபாடு செய்தால் இவர்களுக்கு விரைவில் திருமண யோகம் மற்றும் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும். மங்களமான விஷயங்கள் வீடுகளில் நடைபெறும்.

3. பச்சை புடவை சாற்றி வழிபாடு செய்தால் இவர்களுக்கு செல்வ வளம் மற்றும் தொழில் வளர்ச்சி குடும்பத்தில் மகிழ்ச்சி ஆகியவை கிடைக்கும்.
4. வெள்ளை நிற புடவை சாற்றி வழிபாடு செய்கின்ற பொழுது இவர்களுக்கு மன அமைதி, ஆன்மீகத்தில் உயர்வு, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
5. இளஞ்சிவப்பு சாற்றி வழிபாடு செய்கின்ற பொழுது இவர்களுக்கு அன்பு தம்பதிகள் இடையே ஒற்றுமை, உறவு மேம்பாடு உண்டாகும்.

6. காவி நிறத்தில் புடவை சாற்றி வழிபாடு செய்கின்ற பொழுது இறையருள் பக்தி மற்றும் புதிய தொடக்கங்களுக்கான வழி வகுக்கும்.
7. ஊதா நிறத்தில்புடவை சாற்றி வழிபாடு செய்கின்ற பொழுது மதிப்பு மற்றும் கௌரவம் உயர்ந்த வாய்ப்புகள் இவர்களை தேடி வரும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |