இந்த நதியில் நீராடினால் பல தலைமுறையின் பாவங்கள் நீங்குமாம்
உலகம் முழுவதும் ஐயப்பனுக்கு பக்தர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அவர்களில் முடிந்தவர்கள் கட்டாயம் கார்த்திகை மாதம் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து பகவானை காண சபரிமலை சென்று பிரார்த்தனை மேற்கொள்வார்கள். இவ்வாறு ஐயப்ப பக்தர்கள் இருக்கக்கூடிய இந்த 48 நாட்கள் விரதம் என்பது மிகவும் கடுமையான விரதமாகும்.
இவை அனைத்தும் 18 படிகள் ஏறி ஐயப்பனை சரண் அடைந்து கண்களில் நீர் வடிந்து அவனை வழிபாடு செய்வதற்காக மட்டுமே. பொதுவாகவே விரதம் என்பது மனிதனை ஒழுக்கமான நிலைக்கு கொண்டு வருகிறது. அவர்களை மன ரீதியாகவும் ஆன்மா ரீதியாகவும் மிகவும் தூய்மை அடையச் செய்கிறது.
அப்படியாக ஐயப்பனுக்கு மாலை அணிந்த பிறகு அவர்கள் எல்லாம் ஐயப்ப பக்தர்களாக மாறி விடுகிறார்கள். அங்கே ஆத்மா ஒன்று மட்டுமே வேறுபாடு கிடையாது. அவர்களுக்கு விருப்பு வெறுப்பு என்று எந்த ஒரு தேவைகளும் இல்லை.
ஐயப்பனுக்கு மாலை அணிந்த பக்தர்கள் உலகில் உள்ள அனைத்தும் இறைவனுக்கே என்ற ஒரு எண்ணத்தை மனதில் வைத்துக் கொண்டு விரதம் கடைபிடிப்பார்கள். அவர்கள் பற்றற்ற வாழ்க்கையை அந்த 48 நாட்கள் விரத நாட்களில் வாழ்கிறார்கள். இவ்வாறு 48 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் பதினாறு நாட்கள் விரதம் இருந்து ஐயப்பன் கோவிலுக்கு இருமுடி ஏற்று வணங்கி வரலாம்.
மேலும் ஒரு மனிதன் பிரம்மச்சரியத்தை கடைபிடிக்கும் பொழுது அவனுக்கு இயல்பாகவே ஒரு பற்றற்ற தன்மை உருவாகிறது. அவனை அறியாமல் மனம் எப்பொழுதும் இறைவனை நினைத்துக் கொண்டிருக்கிறது.

ஆதலால் அந்த நேரத்தில் கர்ம வினைகள் எல்லாம் படிப்படியாக குறைந்து தோஷங்கள் இருந்தாலும் அவை முற்றலுமாக விலகுகிறது. இப்படியாக ஐயப்பனுக்கு விரதமிருக்கும் பக்தர்கள் அனைவரும் பற்றற்ற வாழ்க்கையை வாழ்ந்து அந்த விரத நாட்களில் ஐயப்பனை மனதில் நிறுத்தி அவர்கள் முழுமையாக தங்களை ஐயப்பனிடம் கொடுத்து அவர்களுடைய வேண்டுதலை வைக்கிறார்கள்.
இந்த ஆன்மீக பயணத்தில் மிக முக்கியமாக சபரிமலையில் இருக்கின்ற பம்பை நதியில் நீராடுவதுதான். இந்த நதியில் அவர்கள் நீராடும் பொழுது அவர்களுக்கு சகல பாவங்களும் தோஷங்களும் விலகுகிறது.
அதாவது பம்பை நதியில் பித்ரு தர்ப்பணம் செய்தால் அவர்களின் 7 தலைமுறையினர் சந்தித்து வந்த பாவங்களும் தோஷங்களும் விலகி அவர்கள் வாழ்க்கை வளம் பெற்று தடைகள் யாவும் உடைந்து முன்னோக்கி செல்வார்களாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |