இது தெரியாமல் தினமும் ஆலயம் சென்று வழிபாடு செய்யாதீர்கள்

By Sakthi Raj Feb 10, 2026 04:32 AM GMT
Report

  ஆலய வழிபாடு என்பது நிச்சயம் நம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொடுக்ககூடியது. மேலும், ஒவ்வொருவரும் அவர்களுக்கு நேரம் கிடைக்கின்ற வேளையில் தான் ஆலயம் சென்று வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் குறிப்பிட்ட நாட்களில் கட்டாயம் வழிபாடு செய்ய வேண்டும் என்று நேரம் ஒதுக்கி கோவில் சென்று வழிபாடு மேற்கொள்வார்கள்.

அப்படியாக நாம் வாரம் ஒரு முறை அல்லது மாதம் ஒருமுறை என்று நாம் முடிந்த நேரங்களில் மட்டுமே கோயில் சென்று வழிபாடு செய்கிறோம். அவ்வப்பொழுது கோயில் சென்று வழிபாடு செய்யும் பொழுதே பல நன்மைகள் பெரும் பொழுது தினமும் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தால் என்ன பலன் என்று பார்ப்போம்.

இது தெரியாமல் தினமும் ஆலயம் சென்று வழிபாடு செய்யாதீர்கள் | Benefits Of Visiting Temple Daily

2026 சூரியன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு தலைவிதியே மாறப்போகிறதாம்

2026 சூரியன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு தலைவிதியே மாறப்போகிறதாம்

1. 3 நாட்கள் - ஒருவர் மூன்று நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். நோய்கள் குணம் அடையும்.

2. 7 நாட்கள் - ஒருவர் 7 நாட்கள் தொடர்ந்து கோவிலுக்கு செல்லும் பொழுது திருமணம் கைக்கூடி வரும்.

3. 11 நாட்கள்- மனம் ஏதேனும் ஒரு காரணத்தினால் சஞ்சலம் அடைந்திருக்கிறது என்றால் தொடர்ந்து பதினோரு நாட்கள் நீங்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யும் பொழுது மன அமைதியும் தூய்மையும் அடையும்.

4. 13 நாட்கள் - நாம் நினைத்த காரியம் எந்த ஒரு தடைகளும் தாமதமும் இல்லாமல் நிறைவேற 13 நாட்கள் தொடர்ந்து ஆலயம் செய்து சென்று வழிபாடு செய்தால் நிச்சயம் அந்த பலன் பெறலாம்.

5. 21 நாட்கள் - நீண்ட நாட்களாக குழந்தை இல்லை என்று வருத்தப்பட்டு கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து 21 நாட்கள் ஆலயம் சென்று வழிபாடு செய்யும் பொழுது அவர்கள் குழந்தை வரம் கிடைக்கும்.

இந்த 7 அறிகுறிகள் இருந்தால் தெய்வம் உங்களுடன் எப்பொழுதும் இருப்பதின் அர்த்தமாம்

இந்த 7 அறிகுறிகள் இருந்தால் தெய்வம் உங்களுடன் எப்பொழுதும் இருப்பதின் அர்த்தமாம்

6. 33 நாட்கள் - தொடர்ந்து 33 நாட்கள் ஒருவர் ஆலயம் சென்று வழிபாடு செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்த முழு பலனும் கிடைக்கிறது.

7. 77 நாட்கள் - தொடர்ந்து 77 நாட்கள் கோயிலுக்கு செல்லும் பொழுது அவர்களுக்கு சத்திர யாகம் செய்த பலன் கிடைக்கிறது.

8. 108 நாட்கள் - ஒருவர் தொடர்ந்து 108 நாட்கள் ஆலயம் சென்று வழிபாடு செய்து விட்டார்கள் என்றால் மிகச்சிறந்த தேவேந்திர பூஜை செய்த பலன்களைப் பெறுகிறார்கள்.

9. 1008 நாட்கள் - ஒருவர் வாழ்நாளில் 1008 நாட்கள் தொடர்ந்து ஆலயம் சென்று வழிபாடு செய்து விட்டால் அவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்த முழு பலனும் கிடைத்து எல்லா அதிர்ஷ்டமும் பெறுகிறார்கள்.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US