யாரெல்லாம் காவி நிறத்தில் ஆடை அணியலாம்?அணியக்கூடாது
ஆன்மீகத்தில் காவி நிறம் என்பது மன அமைதியை கொடுக்க கூடியதாக பார்க்கப்படுகிறது. மிகவும் ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு செயல்படுபவர்கள் எப்பொழுதும் இது காவி நிறத்தில் உடை அணிந்து இருப்பதை காணலாம்.
அந்த வகையில் காவி நிற உடை அணிவதற்கு பின்னால் இருக்கக்கூடிய காரணங்கள் என்ன? ஒருவர் காவி நிற உடைகள் அணிவதால் அவர்கள் வாழ்க்கையில் கிடைக்கக்கூடிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

ஆன்மீகம் என்பது நம்முடைய உடலையும் மனதையும் சமநிலையில் வைத்துக்கொண்டு எதையும் எளிமையாக எடுத்துக் கொள்ளக்கூடிய ஒரு பக்குவத்தை கொடுக்கக் கூடியது ஆகும். அந்த வகையில் நம்முடைய ஆன்மீக பயணத்தை இன்னும் கூடுதல் ஈடுபாடு செலுத்துவதற்காக நிறைய அன்பர்கள் காவி நிறத்தில் உடை அணிவதை நாம் பார்க்க முடியும்.
மேலும் இந்த காவி நிறத்தில் உடை அணிவதால் நம் மனதும் உடலும் ஒரு அமைதி நிலையை பெறுவதாக சொல்கிறார்கள். ஆதலால் வழிபாடுகளில் பங்கு கொள்ளும் பொழுது கட்டாயமாக காவிநிற உடைகளை அணிவது நமக்கு ஒரு மிகச்சிறந்த மாற்றத்தை மனதளவில் கொடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.
காவி நிறத்தில் இருக்கக்கூடிய உடைகளை நாம் அணியும் பொழுது நம்மை அறியாமல் நாம் எல்லாவற்றையும் துறந்த ஒரு மனநிலைக்கு செல்கின்றோம். அதாவது நம்மிடம் இருக்கக்கூடிய அகங்காரம், பொறாமை, கோபம், தாழ்வு மனப்பான்மை இவ்வாறான விஷயங்கள் நம்மை விட்டு விலகுவதை நாம் கவனிக்கலாம்.

ஆக, காவி நிறத்தில் உடை அணிவது என்பது வெறும் உடையாக மட்டுமல்லாமல் அவை நம் ஆன்மீக வழிபாட்டிற்கு இன்னும் ஆழமாக எடுத்துச் செல்லக்கூடிய துணையாக இருக்கிறது. அதனால் நாம் மன அமைதியை பெறுவதற்கு கட்டாயம் வழிபாடு செய்யும் சமயங்களில் காவி நிறங்களில் அணியலாம்.
மேலும் துறவிகள் அனைவரும் எப்பொழுதும் காவி நிறத்தில் தான் ஆடை அணிந்திருப்பார்கள். ஆதலால் துறவிகள் மட்டும்தான் காவி நிறங்களில் ஆடை அணிய வேண்டும் என்பது அல்ல. காவி நிறங்களில் நாம் அணியக்கூடிய ஆடை வடிவமைப்பு கொண்டு கடைகளில் வித்யாசமான ஆடைகள் கிடைப்பதால் நம் வசதிக்கு ஏற்ப அந்த நிறங்களில் ஆடை எடுத்துக்கொண்டு வழிபாடு சமயங்களில் உடுத்திக் கொள்ளலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |