வெள்ளி மோதிரம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
ஜோதிடத்தில் நாம் அணியும் அணிகலன்கள் பொறுத்தும் நம்முடைய வாழ்க்கையில் மாற்றங்ள் நடக்கும்.அப்படியாக பலரும் மோதிரம் என்றால் தங்க மோதிரம் தான் அணிய விருப்பப்படுவர்கள்.ஆனால் பலரும் வெள்ளி மோதிரம் அணிவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியவில்லை. அதை பற்றி பார்ப்போம்.
ஒருவர் வெள்ளி மோதிரம் அணிவதால் அவர்களுடைய அழகும், ஆளுமையும் அதிகரிக்கும்.வெள்ளி மோதிரம் அணிவதால் சந்திரனின் தாக்கத்தை அதிகரிப்பதுடன் நமக்கு ஏற்படும் உடல் உபாதைகளை சரி செய்யவும் உதவுகிறது.
சிலர் வீட்டில் காரணமே இன்றி தம்பதியினர் இடையே கருத்துவேறுபாடுகள் நடைபெறும்.அவ்வாறு தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட வெள்ளி மோதிரம் அணிய நல்ல பலன் கிடைக்கும். தொழில் செய்பவர்கள் கட்டாயம் வெள்ளி மோதிரம் அணிவதால் அவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி வரும்.அதோடு அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் பெருகும்.
அதே போல் அதிகம் கோபம் கொள்பவர்கள் கட்டாயம் வெள்ளி மோதிரம் அணிவதால் அவர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றம் காணமுடியும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த வேலைமோதிரத்தை அணியவேண்டும் என்று நினைத்தால் ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஓரையில்வெள்ளி மோதிரம் வாங்கி சந்தனமும், பன்னீரும் கலந்த நீரில் கழுவி உங்களுடைய இஷ்ட தெய்வம் அல்லது மகா லட்சுமியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்த பின் அணிந்து கொள்ளலாம்.
வெள்ளி மோதிரத்தை மோதிர விரல் அல்லது நடு விரல் அல்லது ஆள்காட்டி விரல் ஆகிய விரல்களில் அணிந்து கொள்ளலாம். மேலும் மேஷம், சிம்மம், தனுசு ஆகிய நெருப்பு ராசியை சார்ந்த பெண்கள் மோதிர விரலிலும், ரிஷபம், கன்னி, மகரம், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய நில மற்றும் நீர் ராசியை சார்ந்தவர்கள் நடு விரலிலும், மிதுனம், துலாம், கும்பம் ஆகிய காற்று ராசியை சார்ந்தவர்கள் ஆள்காட்டி விரலிலும் வெள்ளி மோதிரத்தை அணிந்து கொள்ளலாம்.
இவ்வாறு சரியான முறையில் நாம் வெள்ளி மோதிரம் அணிவதால் வெள்ளியிலிருந்து வெளிவரும் ஒரு சில மின் அலைகள் உடலில் இருக்கும் நரம்புகள் வழியே சென்று உடல் உள் உறுப்புகளுக்குள் இருக்கும் நோய்களை குணப்படுத்துகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |