ஆடி அமாவாசை ஏன் மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில் செல்ல வேண்டும்?

By Sakthi Raj Aug 09, 2026 02:00 PM GMT
Report

 ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி அமாவாசை மிகவும் முக்கியமான நாளாக இருக்கிறது. இந்த நாளில் நம்முடைய முன்னோர்கள் பூ உலகத்திற்கு அவர்களுடைய குடும்பத்தினரை ஆசீர்வதிக்க வருகிறார்கள். அந்த வகையில், ஆடி அமாவாசை அன்று செல்ல வேண்டிய முக்கியமான ஆலயம் என்னவென்று பார்ப்போம்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மதிமுக்தீஸ்வரர் திருக்கோவில் முன்னோர்களின் சாபம் மற்றும் தோஷங்களை போக்கக்கூடிய முக்கியமான பரிகார தலமாக இருக்கிறது. இங்கு அமைந்திருக்கக் கூடிய அரிசிலாற்றங்கரைநீராடி தர்ப்பணம் செய்வதன் வழியாக பித்ருக்கள் ஆசீர்வாதத்தை நாம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது.

மேலும், வனவாசத்தின் பொழுது ஸ்ரீ ராமர் அவருடைய தந்தை தசரதனுக்கும் ஜடாயுவுக்கும் இறுதி சடங்குகளை செய்த போது பல இடங்களில் அவருக்கு கிடைக்காத மனநிறைவு இந்த ஆலயத்தில் கிடைத்ததாக புராணங்கள் சொல்கிறது.

இந்த ராசிகளுக்கு பணம் வந்தாலே கையில் தாங்காதாம்.. எந்த ராசியினர் தெரியுமா?

இந்த ராசிகளுக்கு பணம் வந்தாலே கையில் தாங்காதாம்.. எந்த ராசியினர் தெரியுமா?

மேலும், அவர் பிடித்து வைத்த பிண்டங்கள் சிவலிங்காமாக மாறியதாக நம்மப்படுகிறது. இந்த கோயிலுக்கு செல்லும் பொழுது நாம் எந்த ஒரு அமாவாசை அல்லது திதி நாளையும் பார்க்க வேண்டாம்.

மனதார முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். மேலும், ஆடி அமாவாசை அன்று என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? இந்த கோயில் சிறப்புகளை இந்த காணொளியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US