2026 பொங்கல்: தவறியும் இந்த திசையில் மட்டும் வைத்து விடாதீர்கள்
தமிழர்கள் கொண்டாடக்கூடிய முக்கியமான பண்டிகைகளில் தைத்திருநாள் மிக விமர்சையாக கொண்டாட கூடிய பண்டிகையாகும். அப்படியாக உலகெங்கிலும் இருக்கக்கூடிய தமிழர்களால் நாளைய தினம் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி மிகச் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த தமிழர் திருநாளான தை திருநாள் தமிழர்கள் பண்பாடு பாரம்பரியம் மற்றும் விவசாய கலாச்சாரத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் விழாவாக அமைந்திருக்கிறது.
இந்த நாளில் ஒவ்வொருவர் வீடுகளிலும் வாசலில் வண்ண நிறங்களில் கோலம் போட்டு, குடும்பங்களுடன் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடுவார்கள். மேலும் பொங்கல் வைப்பதற்கு சரியான திசை மற்றும் நேரம் உள்ளது.
அதை சரியாக நாம் கவனித்து பொங்கல் வைப்பது தான் நமக்கு நல்ல பலன்களை பெற்றுக் கொடுக்கும். அப்படியாக சூரியன் உதிக்க கூடிய திசையான கிழக்கு நோக்கி பொங்கல் பானையில் வைத்து பொங்கல் வைப்பது நல்லது.

இதன் மூலம் நமக்கு நல்ல ஆற்றல் வளம் மற்றும் செழிப்பு கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. மேலும், பொங்கல் வைப்பதற்கு உகந்த திசையாக கிழக்கு அல்லது வடகிழக்கு திசை இருப்பதாக சொல்கிறார்கள்.
இந்த திசைகளில் தான் நேர்மறை ஆற்றல் நமக்கு பெற்று கொடுக்கக்கூடிய சக்தி நிறைந்திருக்கிறது என்பதால் இந்த திசையில் பொங்கல் வைத்து கொண்டாடுவது சிறப்பானதாகும். முக்கியமாக மண் பானையை பயன்படுத்தி திறந்த வெளியில் பொங்கல் வைப்பது இன்னும் கூடுதல் சிறப்பு பெற்று கொடுப்பதாக சொல்கிறார்கள்.
அப்படியாக பொங்கல் தினத்தன்று எந்த திசையில் பொங்கல் வைத்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்ப்போம்.
கிழக்கு திசை:
பொங்கல் திருநாளில் சூரியன் உதிக்கக்கூடிய திசையான கிழக்கு திசை உள்ளது. இந்த திசையில் நாம் பொங்கல் வைக்கும் பொழுது நமக்கு ஒரு புதிய தொடக்கத்தை கொடுக்கிறது. அது மட்டும் அல்லாமல் வீடுகளில் ஆரோக்கியம், செல்வ செழிப்பு குடும்பத்தினர் இடையே நல்ல ஒற்றுமை ஆகியவை கிடைக்கும் என்று சொல்கிறார்கள்.

வடக்கு திசை:
நாம் வடக்கு திசையில் பொங்கல் வைக்கும் பொழுது செல்வ வளம் மற்றும் நம்முடைய வீட்டின் பொருளாதார நிலை மேம்படுவதற்கான வாய்ப்புகளை குறிப்பதாக சொல்கிறார்கள். இந்த திசையில் பொங்கல் பொங்கினால் நம்முடைய வறுமை எல்லாம் விலகும். அது மட்டுமல்லாமல் வீடுகளில் சுப காரிய நிகழ்ச்சிகள் தடை இன்றி நடக்கும் என்று நம்பப்படுகிறது.
தெற்கு திசை:
வீடுகளில் தெற்கு திசை என்பது முன்னோர்களுடைய அருளை பெற்று கொடுக்கக்கூடிய திசையாக இருக்கிறது. இந்த திசையில் நாம் பொங்கல் வைக்கும் பொழுது குடும்பத்தினருடைய பாதுகாப்பு மற்றும் வீடுகளில் தீய சக்திகள் இருந்தால் அவையெல்லாம் விலகி முன்னோர்களுடைய ஆசிர்வாதம் கிடைத்து குடும்பங்களில் சந்திக்கக்கூடிய தடைகள் யாவும் விலகும் என்று சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |