12 ராசிகளுக்கும் ஏற்ற விரதம் அதற்கான பலன் என்ன தெரியுமா?
ஜோதிட ரீதியாக ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தெய்வத்தின் அருள் முழுமையாக இருக்கிறது. அப்படியாக, 12 ராசிகளுக்கு ஏற்ற விரதமும் அவர்களுக்கு உரிய பலன்களை பற்றி பார்ப்போம்.
மேஷம்:
கந்த சஷ்டி விரதம் இருந்தால் இவர்களுக்கு வாழ்க்கையில் உள்ள தடைகள் விலகும்.
ரிஷபம்:
ஏகாதசி விரதம் இருந்து வழிபாடு செய்தால் நினைத்தது நிறைவேறும்.
மிதுனம்:
பிரதோஷ தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் ஐஸ்வர்யம் பெருக்கும்.
கடகம்:
கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்.
சிம்மம்:
மகா சிவராத்திரி அன்று வழிபாடு செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும்.
கன்னி:
வரலட்சுமி விரதம் இருந்து வழிபாடு செய்தால் இவர்களுக்கு பணக்கஷ்டம் யாவும் விலகும்.
துலாம்:
வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் தனம் பெருகும்.
விருச்சிகம்:
கந்த சஷ்டி விரதம் இருந்து வழிபாடு செய்தால் இவர்களுக்கு வினைகள் யாவும் விலகும்.
தனுசு:
சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் இவர்களுக்கு வெற்றிகள் கைக்கூடி வரும்.
மகரம்:
ஏகாதசி தினத்தன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் சகல சௌபாக்கியமும் உண்டாகும்.
கும்பம்:
பௌர்ணமி தினத்தன்று விரதமிருந்து வழிபாடு செய்தால் இவர்களுக்கு வருமானம் உயரும்.
மீனம்:
விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்தால் இவர்களுக்கு தடைகள் யாவும் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |