2026: அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க உகந்த நேரம் என்ன தெரியுமா?
இந்து மத முக்கியமான விஷேச நாட்களில் அட்சய திருதியையும் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் இந்த நாளில் பலரும் வீட்டிற்கு விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி சேர்ப்பது உண்டு.
அதாவது இந்த நாளில் நாம் தங்கம் வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களோ அல்லது வியாபாரம் தொடங்கினாலும் அவை செழிப்பாக வளரும் என்பது நம்பிக்கை. அப்படியாக அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க உகந்த நேரம் என்னவென்று பார்ப்போம்.
ஜோதிடத்தில், அபிஜித் முகூர்த்தம் என்பது நல்ல காரியங்களை செய்வதற்கு எந்த ஒரு நல்ல நேரமும் பார்க்கத் தேவையில்லாத நாட்கள் என்பதாகும். அந்த வகையில் அட்சய திருதியையும் ஒன்றாகும். இந்த நாளில் தங்கம் வாங்குவது மிகவும் விசேஷமான ஒன்று.

அப்படியாக 2026 ஆம் ஆண்டு வைகாசி மாதத்தின் சுக்ல பட்சத்தில் மூன்றாம் நாளான திருதியை திதியில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அதாவது ஏப்ரல் 19 ஞாயிற்றுக்கிழமை அன்று அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் வீடுகளில் தங்கம் வாங்கினால் வீடுகளில் செல்வ வளம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
அது மட்டுமல்லாமல் இந்த நாளில் வாங்கக்கூடிய தங்கமானது இரட்டிப்பாக கூடிய நன்மைகளை நமக்கு வழங்குகிறது. அப்படியாக அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவதற்கு ஐந்து சுப முகூர்த்த நேரங்கள் இருக்கிறது. இந்த நேரத்தில் நாம் எப்பொழுது வேண்டுமானாலும் தங்கம் வாங்கலாம்.

அந்த வகையில் முதல் சுப முகூர்த்த நேரம் காலை 9.16 மணி முதல் 10. 51 மணி வரை இருக்கிறது. அப்படியாக அபிஜித் முகூர்த்தம் மதியம் 12 மணி முதல் 12. 51 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் செய்யக்கூடிய வேலை வெற்றியில் முடியும்.
அதனைத் தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 3.35 மணி வரையிலும் மாலை 6:45 மணி முதல் இரவு 8.10 மணி வரை சுப முஹுர்த்த நேரமாக இருக்கிறது. இந்த நேரத்தில் தங்கம் வாங்கினால் வருடம் முழுவதும் தங்கம் வாங்கும் யோகம் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |