குற்ற உணர்ச்சியில் இருந்து எப்படி மீள்வது? பகவத் கீதை சொல்லும் ரகசியம்

By Sakthi Raj Nov 24, 2026 12:02 PM GMT
Report

வாழ்க்கையில் எல்லோரும் ஏதேனும் ஒரு தருணத்தில் தவறு செய்யக்கூடும். சில நேரங்களில் நம்முடைய வார்த்தைகள் கூட மற்றவர்களை காயப்படுத்தி விடலாம். சில நேரங்களில் எடுக்கக்கூடிய தவறான முடிவுகள் நம்மை பெரிய அளவில் பாதிக்க செய்யலாம்.

அந்த நேரங்களில், பலரும் செய்யக்கூடிய ஒரு முக்கியமான தவறு தன்னைத்தானே குறை சொல்லிக் கொண்டு குற்ற உணர்ச்சியில் மூழ்குவதாகும். இருப்பினும் தவறு செய்து விட்டோம் என்பதற்காகவே நம்முடைய வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம்.

செய்த தவறை உணர்ந்து திருத்திக் கொள்வதிலிருந்து தான் உண்மையான வளர்ச்சி இருக்கிறது. தவறு செய்தால் என்ன செய்ய வேண்டும்? வாழ்க்கையில் ஒவ்வொருவர் செய்த தவறையும் முதலில் நேர்மையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

குற்ற உணர்ச்சியில் இருந்து எப்படி மீள்வது? பகவத் கீதை சொல்லும் ரகசியம் | Bhagavad Gita Lessons On Mistakes

மகாபாரதம்: பெண்களை அவமதித்தால் என்ன நடக்கும்? துச்சாதனனின் வாழ்க்கை உணர்த்தும் பாடம்

மகாபாரதம்: பெண்களை அவமதித்தால் என்ன நடக்கும்? துச்சாதனனின் வாழ்க்கை உணர்த்தும் பாடம்

அதை நியாயப்படுத்தாமல் நான் செய்தது தவறு. ஏன் அந்த தவறு நடந்தது என்பதை பற்றி சிந்தித்து தன்னைத்தானே நாம் அறிந்து கொள்ள வேண்டும். நம்முடைய செயல்களால் மற்றவர்கள் ஏதேனும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மனதார மன்னிப்பு கேட்பதில் எந்த ஒரு தவறும் இல்லை.

அதே தவறை மீண்டும் நிகழாமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். பிறகு அதனை நம்முடைய எண்ணங்களிலும் செயல்களிலும் கொண்டு வர வேண்டும். முக்கியமாக தெரியாமல் செய்த தவறுக்காக வாழ்நாள் முழுவதும் நம்மை நாமே தண்டித்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. குற்ற உணர்ச்சியில் சிக்கிக் கொள்ளாமல் அந்த அனுபவத்திலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்.

பகவத் கீதை உணர்த்தும் அற்புதமான கருத்து:

மனிதர்களுடைய இந்த மனநிலைக்கேற்ப பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் ஆறாம் அத்தியாயம் ஐந்தாவது சுலோகத்தில் "உத்தரேதாத்மனாத்மானம் நாத்மானமவஸாதயேத்" என்று கூறுகிறார்.

இதனுடைய பொருள் ஒவ்வொரு மனிதனும் அவர்களுடைய மனதின் துணையோடு அவர்கள் தன்னைத்தானே வளர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர ஒரு பொழுதும் அவர்கள் தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளக் கூடாது என்பதாகும்.

குற்ற உணர்ச்சியில் இருந்து எப்படி மீள்வது? பகவத் கீதை சொல்லும் ரகசியம் | Bhagavad Gita Lessons On Mistakes

பகவத் கீதை: பயம் உங்கள் முடிவுகளைத் தடுக்கிறதா? கிருஷ்ணர் கூறும் முக்கிய அறிவுரை

பகவத் கீதை: பயம் உங்கள் முடிவுகளைத் தடுக்கிறதா? கிருஷ்ணர் கூறும் முக்கிய அறிவுரை

இதன் வழியாக நம்முடைய மனமே நம்முடைய வளர்ச்சிக்கு பல நேரங்களில் துணையாகவும் அதுவே நமக்கு எதிரியாகவும் நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாகவும் இருக்கக்கூடும் என்று பகவான் கிருஷ்ணர் நமக்கு உணர்த்துகிறார். இந்த பூமியில் எல்லோரும் எல்லா விஷயங்களும் தெரிந்து பிறப்பதில்லை.

சிலர் கற்றல் வழியாக தெரிந்து கொள்கிறார்கள். சிலர் செவி வழியாக தெரிந்து கொள்கிறார்கள். சிலர் அனுபவம் வழியாக தெரிந்து கொள்கிறார்கள்.

ஆக, தவறு செய்வது மனித இயல்பு என்றாலும் அதனை உணர்ந்து திருத்திக் கொண்டு விழிப்புணர்வோடு அடுத்த கட்ட நகர்வை நோக்கி செல்வதே உண்மையான வளர்ச்சியாகும்.

ஆகவே, கடந்த கால தவறுகளுக்காக உங்களை நீங்களே வெறுத்துக்கொள்ளாமல் இன்று முதல் உங்களுடைய மாற்றத்தை உருவாக்கக்கூடிய முயற்சியில் இறங்குகள்.

ஒவ்வொரு புதிய நாளும் நம்மை நாமே சரி செய்து கொண்டு முன்னேறுவதற்கான புதிய வாய்ப்பாகும். ஒவ்வொரு நாளும் புதிய மாணவனாக காலையில் எழுந்து உங்களுடைய நாளை துவங்குங்கள் நல்ல மாற்றங்களை நீங்களே உணரலாம்.  

Disclaimer:

இது பொதுவான ஜோதிட வழிகாட்டுதல் மட்டுமே. இது மருத்துவ, நிதி, சட்ட அல்லது தொழில்முறை ஆலோசனை அல்ல. உங்கள் தனிப்பட்ட சூழ்நிலைக்கு ஏற்ப முக்கிய முடிவுகளை எடுக்கும்போது தகுதியான நிபுணரை அணுகுங்கள். ஜோதிடம் ஒரு நம்பிக்கை அடிப்படையிலான வழிகாட்டுதல் மட்டுமே எதிர்காலத்தை துல்லியமாக கணிக்கும் உத்தரவாதம் இல்லை.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US