வீட்டில் புத்தர் சிலை மற்றும் ஓவியங்கள் வைக்கலாமா?
புத்தர் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.அமைதியின் இன்னொரு உருவம் புத்தர் என்றே சொல்லலாம்.மிகவும் கூச்சலான இந்த உலகில் அனைவரும் அமைதியை நாடி தான் ஓடுகின்றனர்.ஆனால் அந்த அமைதியின் உருவமாக வாழ்ந்தவர் புத்தர்.அப்படியாக அவரை பின்பற்றுபவர்கள் அதிகம்.
அந்த பிரியத்தின் அடிப்படையில் வீட்டில் புத்தரின் சிலை மற்றும் ஓவியங்கள் வைப்பதுண்டு.ஆனால் பலருக்கும் புத்தர் சிலை வீட்டில் வைப்பதால் நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை அதை பற்றி பார்ப்போம். உண்மையில் புத்தரின் சிலையை வீட்டில் வைத்தாலே அமைதி, செழிப்பு உண்டாகும்.
இன்னும் சொல்ல போனால் புத்தரின்முகம் பார்த்தாலே நமக்கு ஒருவித அமைதியும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.மேலும் நாம் புத்தர் பார்க்கும் பொழுது மனதில் உற்சாகமும் ஒழுக்கமும் உண்டாகும்.புத்தர் சிலைகளில் பலவகை இருக்கிறது.
அதன்படி, புத்தர் சிலையை ஜன்னல் அல்லது கதவுக்கு எதிரே வைக்கக்கூடாது. படுக்கை அறையில், சிறிய மரச்சாமான்களில் வைக்கக்கூடாது.அடுத்ததாக ஃபிரிட்ஜ் உட்பட மின்சாத பொருட்கள் மீது வைக்கக்கூடாது.
அவ்வாறு செய்யும் பொழுது அவை நேர்மறை அதிர்வுகளை தடுத்துவிடும்.மிக முக்கியமாக சமையலறை, கழிவறை அருகில் வைக்கக்கூடாது.எப்பொழுதும் நல்ல சூழல் அமைய வெளிச்சம் நிறைத்த இடத்தில் புத்தர் சிலையை வைக்க வேண்டும்.புத்தர் சிலை வைக்கும் இடம் எப்போதும் சுத்தமாகவே இருக்க வேண்டும்.
குழந்தைகள் படிக்கும் அறையில் வைக்கலாம்.புத்தர் சிலைகளை வீட்டில் வைக்க விரும்பினால் கண்டிப்பாக வெள்ளை, மஞ்சள் அல்லது பழுப்பு நிறங்களில் தான் வைக்க வேண்டும். இதனை தவறும் பட்சத்தில் புத்தர் சிலையால் வரும் பலன்கள் சரியாக வந்து சேராமல் இருக்கும்.
அதேபோல, மங்களகரமாக கருதப்படும் புத்தர் சிலையை வெறுமையாக வைக்காமல், அதன் பக்கத்திலேயே ஏதாவதொரு பித்தளை, அல்லது பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில், சில பூக்களையும் போட்டு வைக்கலாம்.
மேலும் புத்தர் சுவர் ஓவியமும், நல்ல ஆற்றலையும் செழிப்பையும் தரக்கூடியது.வடக்கு மற்றும் வடகிழக்கு ஆகியவை புத்தர் ஓவியங்களுக்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இந்த திசைகள் வாஸ்து சாஸ்திரத்தின்படி மங்களகரமானதாகவும் கருதப்படுகிறது.இந்த இடங்களில் புத்தர் ஓவியம் வைக்க நல்ல நேர்மறை ஆற்றலை தரும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |